,

கோவை வாழ் மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவை திரட்ட பிரதமர் மோடி வருகிறார் – அண்ணாமலை பேட்டி

annamalai
Spread the love

பிரதமர் மோடியின் ரோட் ஷோ குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இந்த நிகழ்ச்சியை பொதுமக்களும் பாஜகவினரும் மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி இருக்கின்றனர். மேலும் இதனை மக்கள் தரிசன யாத்திரை என நாங்கள் அழைக்கிறோம். இது சரித்திர யாத்திரையாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

தொடக்கத்தில் இருந்தே கோவையில் நடைபெறும் பிரதமர் மோடியின்  ரோட் ஷோ நிகழ்ச்சியை தடுப்பதற்கு தமிழக அரசு தீவிரம் காட்டி வந்தது. எனினும் நீதிமன்ற உத்தரவினால் காவல் துறையின் ஒத்துழைப்போடு அவர்களுடன் இணக்கமாக இருந்து இந்த பேரணி நடத்தப்பட உள்ளது.  கோவை வாழ் மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் ஆதரவை திரட்ட பிரதமர் மோடி வருகிறார். கடந்த 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு மலரஞ்சலி செலுத்த இருக்கிறார்.  இதற்கான முன் அனுமதியும் பெறப்பட்டு உள்ளது. தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களில் இஸ்லாமியர்களும் அடக்கம், இவர்கள் அனைவருக்கும் சேர்த்து தான் பிரதமர் மோடி மலரஞ்சலி செலுத்துகிறார்.” என்றார்.