கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பாலம் பணிகள்: 90 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு!

Spread the love

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், சாய்பாபா காலனி பகுதியில் மேம்பாலம் பணிகள் தொடங்கப்பட உள்ளதால், நாளை (12.08.2025) முதல் அடுத்த 90 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

பணிகள் நடைபெறும் இடம்:

  • அழகேசன் ரோடு சந்திப்பு முதல் எருக்கம்பெனி வரை

மாற்றுப் போக்குவரத்து வழிகள்:

  1. பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள்:

    • அவினாசிலிங்கம் கல்லூரி > பாரதி பார்க் ரோடு > GCT ரவுண்டானா > தடாகம் சாலை > வெங்கிட்டாபுரம் > இடையர்பாளையம் > துடியலூர் வழியாக மேட்டுப்பாளையம் செல்லலாம்.

  2. கவுண்டம்பாளையம் வழியாக வரும் வாகனங்கள்:

    • வழக்கம்போல நகருக்குள் அனுமதி உள்ளது.

  3. அவினாசி ரோடு செல்லும் வாகனங்கள்:

    • நல்லாம்பாளையம் > கணபதி > காந்திபுரம்

    • அல்லது

    • சங்கனூர் சந்திப்பு > கண்ணப்பநகர் > சிவானந்தா காலனி > காந்திபுரம்

  4. காந்திபுரம் – மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள்:

    • ARC சந்திப்பு > கங்கா மருத்துவமனை > அழகேசன் ரோடு > தடாகம் சாலை > வெங்கிட்டாபுரம் > மேட்டுப்பாளையம்

  5. NSR ரோடு வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள்:

    • எஸ்டேட் பேங்க் சந்திப்பு > ராஜா அண்ணாமலை ரோடு > பாரதி பார்க் ரோடு > அவினாசிலிங்கம் கல்லூரி சந்திப்பு

முக்கியம்:
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு பயண திட்டங்களை அமைத்துக்கொள்ளுமாறு கோவை மாநகர காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.