கோவை மத்திய சிறையில் இருந்து கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அன்னூரைச் சேர்ந்த ராகவன் (25) என்பவர் வழிப்பறி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இவரை அன்னூர் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்து வந்தனர். அப்போது சிறை வளாகத்தின் நுழைவுப் பகுதியில் இருந்து அவர் திடீரென தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பந்தயசாலை போலீஸார் தப்பியோடிய ராகவனைத் தேடி வருகின்றனர். காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் இருப்பதால், அவர் பேருந்தில் வெளியூர் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.



Leave a Reply