கோவை தபால் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Spread the love

கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வியாழக்கிழமை பிற்பகலில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் உள்ள தபால் நிலையம் மற்றும் ரயில் நிலைய தபால் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோல் உப்பிலிப்பாளையத்தில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று அலுவலக அறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர சோதனைக்குப் பிறகு எங்கும் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பதும், இது வெறும் புரளி மிரட்டல் என்பதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து மின்னஞ்சல் அனுப்பியவரை கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *