கோவை சுண்டக்காமுத்தூர் ஐயப்பன் கோவிலில் எஸ்.பி. வேலுமணி – வானதி சீனிவாசன் சந்திப்பு

Spread the love
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கியத் தலைவர்களான அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் ஆகியோர் கோவையில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பு, வெறும் சந்திப்பாக மட்டும் இல்லாமல் தேர்தல் தொடர்பான ஆலோசனையாகவும் பார்க்கப்படுகிறது.

தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் எஸ்.பி. வேலுமணி மற்றும் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் ஆகியோர் கோவிலில் சந்தித்து உரையாடினர். கடந்த சில நாட்களாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் தொகுதி நிலவரங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.