கோவை கொசிமா புதிய நிர்வாகிகள் தேர்வு

Spread the love

கோவை சிட்கோ பகுதியில் செயல்பட்டு வரும் கோவை சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் சங்கம் (கொசிமா) சார்பில் 52வது பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 27, 2025 அன்று மாலை 6.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக திரு. N. மதிவாணன், செயலாளராக திரு. R. குமார், பொருளாளராக திரு. J. சௌந்தர்ராஜ், துணைத் தலைவர்களாக திரு. S. லோகநாதன், திரு. C. ராஜசேகரன், திருமதி. S. மல்லிகா தேவி மற்றும் இணைச் செயலாளர்களாக திரு. N.L. சிஜு, திரு. A. நவநீதகிருஷ்ணன், திரு. N. மகேஸ்வரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள் உடனடி முன்னாள் தலைவர் திரு. C. நடராஜன் அவர்களின் தலைமையில் பதவி ஏற்றனர். இந்நிகழ்வில் முன்னாள் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், கொடிசியா, அகில இந்திய பம்ப் உற்பத்தியாளர் சங்கம், LUB, FOCIA போன்ற தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள், மேலும் லயன்ஸ் கிளப் 3242-C மாவட்ட ஆளுநர் மற்றும் 324 முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர் உள்ளிட்டோர் பெருமளவில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசை நோக்கி சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தொழில்துறை வளர்ச்சிக்கான முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்ட இந்த பொதுக்குழு கூட்டம் உறுப்பினர்களின் பாராட்டுக்குரிய ஒன்றாக அமைந்தது.