கோவையில் வைர நகை உற்பத்தி தரநிலைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

Spread the love

இந்திய தர நிர்ணய அமைவனம் கோயம்புத்தூர் அலுவலகத்தின் சார்பில் வைர நகைகள் உற்பத்தியில் கடைபிடிக்க வேண்டிய தரநிலைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இந்திய தர நிர்ணய அமைவனம் கோயம்புத்தூர் அலுவலகத்தின் தலைமை அதிகாரி, மூத்த விஞ்ஞானி ஜி.பவானி சிறப்புரையாற்றினார்.
இதில் சிறப்பு விருந்தினராக ஆல் இந்தியா ஜெம் அண்ட் ஜுவல்லரி டொமேஸ்டிக் கவுன்சில் அமைப்பின் இயக்குனர் எச்.எம்.சுல்தான் மொஹிதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வைரக் கற்கள் உற்பத்தி மற்றும் வைர நகை தயாரிப்பு குறித்த பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.
இதனை அடுத்து இந்திய தர நிர்ணய அமைவனம் கோயம்புத்தூர் அலுவலகத்தின் விஞ்ஞானிகள் வி.ரமேஷ், வினித் குமார், ரினோ ஜான் ஆகியோர் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் செயல்பாடுகள், தங்க நகை மற்றும் வைர நகை உற்பத்தியில் கடைபிடிக்க வேண்டிய IS 19649:2025 தரவிதியின் முக்கியத்துவங்கள் மற்றும் தரச் சான்றிதழ் பெறுவதன் அவசியம் குறித்தும் விளக்கினர்.
இந்நிகழ்வில் கோவை, திருப்பூர், ஈரோடு, கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த தங்கம் வைரம் நகை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை யாளர்கள் என 120க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.