ஒவ்வொரு சட்ட சபை தேர்தலிலும் கோவை பகுதியில் அதிமுக, அதன் கூட்டணி கட்சிகளே வெற்றி வாகை சூடியுள்ளது வரலாறு .
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மீது கோவை மாவட்ட மக்கள் வைத்திருந்த அலாதியான அன்பே அதற்கு காரணம். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலலுக்காக அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் மும்மரமாக உள்ள நிலையில், கோவையில் உள்ள 10 தொகுதிகளின் தற்போதைய பார்வை…..
தொண்டாமுத்தூர்
கடந்த தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இரண்டாவது வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி அசைக்க முடியாத நட்சத்திர வேட்பாளர் என்பதால், பொதுக்குழு உறுப்பினரான கார்த்திகேயனை பெயர் அளவில் திமுக தலைமை போட்டியிட வைத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டால், அது தொண்டாமுத்தூர் தொகுதியில் முதன் முதலில் அமலுக்கு கொண்டுவரப்படும். அதனால் தான் அதிமுக வேட்பாளர் எஸ் பி வேலுமணி, 50 ஆண்டு காலம் செய்ய வேண்டிய பணிகளை ஐந்தாண்டுகளில் முடித்துள்ளோம் என பெருமிதமாக செல்லும் இடங்களில் எல்லாம் கூறி வருகிறார். அதிமுகவுக்கு வெற்றி உறுதி செய்யப்பட்ட தொகுதிகளில் தொண்டாமுத்தூர் முதலிடம்.
கோவை தெற்கு
கோவை மாவட்டத்தில் 2-வது குறைந்த வாக்காளர்களை கொண்ட இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.
இந்த தொகுதியில் போட்டியிடும் அம்மன் கே.அர்ச்சுணன் ஆளுங்கட்சியாக எம்எல்ஏவாக இருந்த போது, அடிப்படை வசதிகளையும், அரசின் திட்டங்களையும் கச்சிதமாக செயல்படுத்தியவர். இவர், பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம், “இது தாங்கள் கொடுத்த சாலை,சாக்கடை, குடிநீர் வசதி ,மின் விளக்கு ” என்று நினைவூட்டுகின்றனர். இதனால், அம்மன் அர்ச்சுணன் உற்காசமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார். எளிமையாக பழக கூடியவர் அம்மன் அர்ச்சுணன். யார் வேண்டுமானாலும் போன் செய்தே குறைகளை அவரிடத்தில் சொல்லலாம். அதை, உடனடியாக நிவர்த்தி செய்தும் தருவார். செந்தில் பாலாஜி இந்த தொகுதியில் போட்டியிட்டாலுத், இந்த தொகுதியைச் சேர்ந்த பரம்பரை திமுகவினர், சீட் எதிர்பார்த்தவர்கள் வெளியூர் வேட்பாளரை ஏற்க மனதளவில் தயார் இல்லை. அதிமுக – பாஜகவின் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வாக்குகளை மட்டும் அப்படியே, அறுவடை செய்தால் வெற்றி செந்தில் பாலாஜிக்கு தோல்வி உறுதியாகி விடுமென்றே கூறுகின்றனர்.
சூலூர்
தொகுதி சீரமைப்புக்கு பின் உருவான சூலூரில் அதிமுகவே தொடர்ந்து வெற்றி கண்டு வந்துள்ளது. கவுண்டர் சமூக ஓட்டுக்களே வெற்றியை இங்கே வெற்றியை நிர்ணயிக்கும் காரணி. சிட்டிங் எம்எல்ஏ வான கந்தசாமி தொகுதி முழுவதும் நன்கு பிரபலமானவர்.
எளிமையாக அணுகக் கூடியவர். எனவே, கந்தசாமிக்கு வெற்றி வாய்ப்பு காணப்படுகிறது. பல கட்சிகளுக்கு சென்று வந்த திமுக வேட்பாளர் தளபதி முருகேசன் தோல்வியடைவார் என்றே தொகுதி முழுக்க பேசப்படுகிறது.
கவுண்டம்பாளையம்
2011,2016,2021 ஆகிய மூன்று தேர்தல்களிலுமே தொடர்ந்து அதிமுக பெற்ற தொகுதி. நாயக்கர், கவுண்டர் இனத்தவர்களே அதிகம் வசிக்கும் இங்கு, பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் திமுக வசம் உள்ளது. எனினும், பி.ஆர்.ஜி அருண்குமால் சிறந்த முறையில் பழகக் கூடியவர். எதிர்க்கட்சியாக இருந்தாலும், தொகுதிக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை போராடி பெற்றுத் தந்துள்ளார்.
குறிப்பாக மலைவாழ், பழங்குடி மக்களுக்கு தனது தொகுதி நிதியிலிருந்து தேவையான வசதிகளை பார்த்து பார்த்து செய்து கொடுத்துள்ளார். .தேர்தல் அரசியலுக்கு புதியவரான காங்கிரஸ் வேட்பாளர் சூரிய பிரகாஷ், இளைஞர் அணி தலைவர். இவரை அறிவித்த உடனே, கோஷ்டிகளால் உருவான காங்கிரஸில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். கோவை மாவட்டத்திலேயே அதிக வாக்காளர்கள் அதாவது, 4 லட்சத்து 7 ஆயிரத்து 507 வாக்காளர்களை கொண்ட இத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி அருண்குமாரின் வெற்றி எளிது என்றே கணிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்
சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் அதிமுக அதிபட்சமாக 9 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவிற்கு இணையாக பாஜகவுக்கும் செல்வாக்கு உள்ளது. இதனால், அதிமுக பத்தாவது முறையாக வெற்றி பெறும் என மேட்டுப்பாளையம் அதிமுக வேட்பாளர் ஓ. கே சின்னராஜ் தரப்பினர் குதூகலிப்பில் உள்ளனர். இந்த தெகுதியில் இரு முறை மட்டுமே வெற்றி கண்ட திமுகவினர் கவிதா கல்யாணசுந்தரத்தை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒக்கிலிய கவுடர் சமுதாயத்தை சேர்ந்த இவருக்கு, அவரது சமுதாய ஓட்டுகள் பரவலாக விழ வாய்ப்புண்டு.
கோவை வடக்கு
தொடர்ந்து அதிமுகவே தக்க வைத்துக் கொண்டு வரும் இத்தொகுதி அனைத்து சமுதாய மக்களையும் உள்ளடக்கியது. 2 லட்சத்து 91 ஆயிரத்து 533 ஓட்டுக்களை கொண்ட கோவை வடக்கில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் துரை செந்தமிழ்ச்செல்வன் தனது தேர்தல் பணிகளை சுறு சுறுப்பாகியுள்ளார். செந்தில் பாலாஜியின் வியூகத்தை நம்பியே தனது பிரச்சாரப் பணியில் உள்ளார்.
பாஜகவின் வானதி சீனிவாசன், கடந்த 6 மாதத்துக்கு முன்பாகவே இங்கு தேர்தல் பணிகளை தொடங்கி விட்டார். தனது மக்கள் சேவை மையம் மூலம் நலத்திட்டங்கள், மருத்துவ முகாம் என பொது மக்களுடன் வானதி நெருக்கம் காட்டி வருகிறார். தமிழக வெற்றிக் கழக சார்பில் போட்டியிடும் சம்பத் குமாரின் ‘விசில்’- சத்தமும் ஆங்காங்கு இங்கு அடிக்கடி எழுப்பப்படுகிறது.
கிணத்துக்கடவு
இந்த தொகுதியில் விவசாயம்தான் பிரதானம். இத்தொகுதியில், மூன்று லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
அதிமுகவின் நிரந்தர தொகுதி என்ற வரலாறு கொண்ட கிணத்துக்கடவில், அதிமுக எம்.ல்.ஏ தாமோதரன் சிறப்பான முறையில் பணியாற்றிக் கொண்டிருகிறார். பணபலம் படைத்த திமுக வேட்பாளர் சபரி, உதயநிதியின் சாய்ஸ். தொகுதி முழுவதும் ஒரு ரவுண்ட் அடித்து விட்டார்.அதே வேகம் தொடர்ந்தால் இந்த தொகுதியில் வெற்றி யாருக்கு என்று கணிக்க முடியாமல் போய் விடும்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் 36 வார்டுகள், வடக்கு, கிணத்துக்கடவு ஒன்றியங்களை கொண்ட தொகுதியில் தென்னை விவசாயம் தான் முக்கியம். தொடர்ந்து, 10 முறை இங்கு அதிமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக தனது கூட்டணி கட்சியான கொ.ம .தே.க. வேட்பாளர் நித்தியானந்தத்தை இங்கு வேட்பாளராக அறிவித்துள்ளது. இவர், பல மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணியினை தொடங்கி விட்டார். இது, உள்ளூர் திமுக வாசிகளுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது .இதன் காரணமாக , பொள்ளாச்சி தொகுதியில் அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமனின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வால்பாறை (தனி)
தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தான் இத்தொகுதியின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்கள்.
திமுக தரப்பில் உள்ளூர் வேட்பாளர் சுதாகர் களம் காண்கிறார். எனவே, அக்கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். கோவை மாவட்டத்தில் குறைவான வாக்காளர்களைக் கொண்ட இந்த தொகுதியில் , கிணத்துக்கடவைச் சேர்ந்த லக்ஷ்மண சிங் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அதிமுகவினர், இவருக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இதனால், லக்ஷ்மண சிங் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
சிங்காநல்லூர்
நாயுடு மக்கள் பெரும்பான்மையாக உள்ள இத்தொகுதியில் அதிமுக -திமுக மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. எனினும், அதிமுகவுக்கு வாக்குகள் அதிகம். எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிமுக வேட்பாளர் கே ஆர் ஜெயராம், முடிந்தளவு மக்கள் கோரிக்கைகளை நிறைவெற்றி கொடுத்துள்ளார். பல மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தியவர்.
நன்கு அறிமுகமானவர் என்ற தகுதியால் தொகுதி முழுவதும் வலம் வருகிறார். காங்கிரஸ் வேட்பாளரான ஸ்ரீ நிதி நாயுடுக்கு ஆரம்பமே சரியில்லை. 2023ம் ஆண்டுதான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இவருக்கு சீட் கொடுக்கப்பட்டதால், சொந்த சொந்த கட்சியினரே போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்கட்சி பூசலால் ஸ்ரீ நிதிக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கூறப்படுகிறது.



Leave a Reply