கோவையில் ரோவர் கிராப்ட்

Spread the love
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த ராவத்தூர் பகுதியைச் சேர்ந்த யூரோடெக் சொல்யூஷன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் ட்ரில்லிங் மெஷின், கிரைண்டிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை தயாரித்து 45க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக நீரிலும் நிலத்திலும் இயங்கும் வகையில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரோவர் கிராஃப்ட் படகு ஒன்றை தயாரித்துள்ளது.

இதன் சோதனையோட்டம்  சூலூரில் உள்ள சின்ன  குளத்தில் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு படை பாதுகாப்புடன் இன்று நடைபெற்றது. ரோவர் கிராப்ட் படகு நீரில் சீறிப்பாய்ந்ததை அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் ஆர்வத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.