கோவையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 450 டெங்கு வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும், கடந்த இரண்டு வாரங்களாக பாதிப்பு படிப்படியாக குறைந்து தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
டெங்குவால் இதுவரை உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
கோவையில் ரூ.111 கோடி மதிப்பில் பல்வேறு மருத்துவத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த அமைச்சர், கோவையில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் செவிலியர் கல்லூரி அமைக்கப்படும் என்றார்.
பொள்ளாச்சியில் ரூ.6 கோடியில் தாய்–சேய் நல மையமும், கவுண்டம்பாளையம் மற்றும் சிங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் என்றும் கூறினார்.
செவிலியர் பற்றாக்குறையை போக்க 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், 2,500 செவிலியர்கள் நிரந்தரப்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
புதிய தலைமைச் செயலகம் கண்டிப்பாக தேவை என தெரிவித்த அவர் முதல்வர் முழுமையான விளக்கம் அளிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்றார். தாராபுரம் இடைத்தேர்தலில் ஆட்சியின் சாதனைகளை எடுத்துச் சொன்னாலே போதும் என்றும், வரலாறு காணாத வெற்றி கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், தவெக ஒரு அரசியல் கட்சி அல்ல, இயக்கம்; அனைவரையும் அரவணைத்துச் செல்வோம் என்றும் அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.



Leave a Reply