கேரள போலீசார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கோவையில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 12.80 கிலோ எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் சிக்கியது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.10 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முகமது சாஹிர், ஜாபிர் அலி, ஷைம் அக்பர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, இதன் பின்னணியில் மேலும் யாரேனும் உள்ளனரா, யாருக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டது என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள போலீசாரின் விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே கோவையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்தில் உள்ள தொடர்புகள் குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



Leave a Reply