கோவை நகரில் ஜாக் அமைப்பு சார்பில் நடைபெற்ற ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் இன்று மற்றும் நாளை கொண்டாடப்படுகிறது. சவுதி அரேபியாவில் பிறை தெரிந்ததைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள ஜாக் அமைப்பினர் ரம்ஜான் பண்டிகையை அனுஷ்டித்து வருகின்றனர்.
அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக் அமைப்பினர் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகைகளை மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக, கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஆயிஷா மஹால் வளாகத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இந்த தொழுகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒழுங்காக தொழுகை நடத்தப்பட்டது.
தொழுகை முடிந்ததும், பக்தர்கள் ஒருவருக்கொருவர் அணைத்துக்கொண்டு ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு சென்று, உறவினர்களுடன் உணவுகளை பகிர்ந்து கொண்டு பண்டிகையை கொண்டாடினர்.



Leave a Reply