,

கோவையில் ரமலான் பண்டிகை கோலாகலம்

ramzan
Spread the love
ரம்ஜானை முன்னிட்டு கோவையில் சிறப்பு தொழுகை முடிந்த பின்பு ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகையினை  முன்னிட்டு கோவை உக்கடம் ஜமாத் அகலயே ஹதீஸ் பள்ளி வாசல் சார்பில்  பள்ளி நிர்வாகி தயூப்கான்,இமாம் ஷதகத்துலா உமரி,தலைமையில் ரமலான் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.