கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர்.
மாலை சுமார் 5.30 மணி அளவில் தனி விமானம் மூலம் பிரதமர் கோயம்புத்தூர் வந்த பிரதமர் மோடி சுமார் 6 மணி அளவில் பேரணி துவங்கும் இடமான சாய்பாபா கோவில் சந்திப்பிற்கு வந்தடைந்தார். பின்னர் பாஜகவினரின் வரவேற்போடு பேரணி தொடங்கியது. இந்த பேரணியின் போது பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் சாலையின் இருபுறமும் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மூன்று கிலோமீட்டர் சென்ற பேரணி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே நிறைவுற்றது, 1998 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் குண்டுவெடிப்பின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கு பிரதமர் மோடி மலரஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், ஏ.பி.முருகானந்தம், ஹெச்.ராஜா, சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply