கோவையில் திறப்பு விழா கடைக்குள் அத்துமீறி நுழைந்து பணம் கேட்டு திருநங்கைகள் மிரட்டல்

Spread the love

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் ஷிங்க் எனும் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அங்கு சென்ற திருநங்கைகள் ரிப்பன் வெட்டிய அடுத்த நொடி, அத்துமீறி கடைகளுக்குள் நுழைந்து கடையின் உரிமையாளர் யார் என கேட்டு உடனடியாக அவரிடம் நாங்கள் 10 பேர் வந்துள்ளோம் எங்களுக்கு நபர் ஒருவருக்கு ஐந்தாயிரம் விதம் 10 பேருக்கு 50,000 தர வேண்டும் கூறியுள்ளனர்.

அப்படி கொடுக்கவில்லையென்றால், நாங்கள் சாபம் விட்டு விடுவோம் என்று மிரட்டினர். இதனால் செய்வதறியாது திகைத்து போன கடை உரிமையாளர் தன்னிடம் இருந்த 501 ரூபாயை எடுத்து, அவர்களிடம் கொடுத்துள்ளார். பிறகு வாருங்கள் உங்களுக்கு நான் பணம் தருகிறேன் என்று தெரிவித்தார். ஆனால் திருநங்கைகள், நாங்கள் உன்னிடம் பிச்சை கேட்டு வரவில்லை. இந்த 501ரூபாய் இதனை நீயே வைத்துக்கொள் என்று திருப்பி அவரிடம் கொடுத்தனர். இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை அதிகாரி பிரபாகரன் கலந்து கொண்டார் . அவரது, முன்னிலையில் திருநங்கைகள் இப்படி நடந்து கொண்டது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. பின்னர், தலைக்கு ஆயிரம் விதம் பத்தாயிரம் கடன் உரிமையாளர் வழங்கியதையடுத்து திருநங்கைகள் கலைந்து சென்றனர். கோவை மாநகர் பகுதியில், இப்படி அடாவடியில் ஈடுபடும் திருநங்கைகள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *