தொழில் நகரமான கோவையில் பீகார் உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். வடவள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓணம்பாளையத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பீகார் மாநிலக் குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில், அந்தப் பகுதியில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வடவள்ளி காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, குடியிருப்பு அருகே சுமார் 4 அடி உயரம் வளர்ந்திருந்த கஞ்சா செடியை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, அங்கு தங்கி இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 40 இளைஞர்களை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
இந்த கஞ்சா செடியை வளர்த்தது யார், அது வணிக நோக்கத்திற்காகவா அல்லது தனிப்பயன்பாட்டிற்காகவா என்பதையும், அந்தப் பகுதியில் மேலும் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Leave a Reply