கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தில் பொது மக்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பதற்கான வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்தி குமார் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் கோவை,பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் வாக்களிக்க அதிகரிக்க பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருவதாகவும் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு மாநகர பகுதிகளில் விழிப்புணர்வுக்காக வீடியோ தயாரித்து வாகனத்தில் சென்று கோவை மாநகரம் முழுவதும் சுற்றி வருகிறது.
ரோட்டரி கிளப் மற்றும் தன்னார்வலர்கள் குழு மூலமாக செல்வந்தர்களுக்கு வாக்களிக்க விழிப்புணர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply