கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலி – தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய போலீஸ் தீவிரம்

bussy anand
Spread the love

கரூர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கரூர் ஏடிஎஸ்பி பிரேமானந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதேசமயம், போலீஸ் தேடுவதை அறிந்த புஸ்ஸி ஆனந்த், திருச்சியிலிருந்து சேலம் நோக்கி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் தன் செல்போனை ஒப்படைத்து, சிக்னல் மூலம் போலீசாரை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது.

புஸ்ஸி ஆனந்த் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.