, ,

கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கை… பைசன் படத்தின் கதை என்ன?

manathi ganesan
Spread the love

 

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடித்துள்ள ’பைசன்’ (காளமாடன்) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள திரைப்படம் ‘பைசன்’ இந்த படத்தில் ரஜிஷா விஜயன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

கலையரசன், பசுபதி, லால், அழகம் பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். மாரி செல்வராஜ் முந்தைய படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இசையமைத்துள்ள நிலையில், முதல் முறையாக மாரி செல்வராஜ், நிவாஸ் கே பிரசன்னாவுடன் இணைந்துள்ளார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.துருவ் விக்ரமின் புது லுக்.. மாரி செல்வராஜ் பைசன் பட பர்ஸ்ட் லுக் வெளியானது. வித்தியாசமான லுக்கில் துருவ் அந்த போஸ்டரில் காட்டப்பட்டு இருக்கிறார். மேலும் துருவ் விக்ரம் என்ற பெயரில் விக்ரம் பெயரையும் நீக்கி இருக்கிறார்கள்.
துருவ் என்று மட்டும் குறிப்பிடப்பட்டு இருப்பது ஏன் என சிலர் கேள்வியும் எழுப்பி இருக்கின்றனர்.

இந்த படத்தில் கபடி வீரராக துருவ் நடித்துள்ளார். இதற்கிடையே, மாரி செல்வராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும், ஏன் வருகிறேன் என்றும் உனக்கு தெரியும், வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும். ஆதலால், நீ கதவுகளை அடைக்கிறாய் நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். இந்த படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.