ஐப்பசி மாத கந்த சஷ்டியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி ஸ்ரீ திருச்செந்தூர் கோட்டம் கோவிலில் 48வது ஆண்டாக சூரசம்ஹார விழா கோலாகலமாக தொடங்கியது. விழாவின் முதல் நாளான 22.10.2025 புதன்கிழமை கொகொடியேற்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து கணபதி ஹோமம், ஷஷ்டி விரத பூஜைகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.
24.10.2025 வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை, 27.10.2025 திங்கட்கிழமை காலை 7 மணிக்கு சத்ரு சம்ஹார வேள்வி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 28.10.2025 செவ்வாய்க்கிழமை வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. 29.10.2025 அன்று மஞ்சள் நீராட்டு, மறுபூஜையுடன் விழா நிறைவு பெறும்.
இந்த முழு ஆன்மிக நிகழ்வுகளையும் நமஹா ஆன்மீக அமைப்பினர் முன்னெடுத்து வருகின்றனர். அமைப்பின் எம்.பி.ஏ. பட்டதாரிகள் சட்டநாதன், பாஸ், கோபாலகிருஷ்ணன் மற்றும் குழுவினர் இணைந்து சத்ரு சம்ஹார ஹோமத்தில் பூஜை செய்யப்பட்ட 100 முருகன் வேல்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
இந்த நமஹா அமைப்பு புரோகிதம், ஜோதிடம் மற்றும் யாத்திரை சேவைகளை வழங்கி வருகிறது. இந்த விழாவில் கோவில் நிர்வாகிகளைச் சேர்ந்த சுந்தர்ராஜ், பரமேஸ்வரி தலைமையில், புரோகிதர் சௌந்தரபாண்டியன் ஹோம வேள்வியை நடத்தினார்.




Leave a Reply