, ,

என் மகனால அம்மானு கூட கூப்பிட முடியல… என்ன நடந்தது? நடிகை மாளவிகாவுக்கு நடந்த சோகம்

malavika
Spread the love

இயக்குநர் பாலசந்தர் இயக்கிய அண்ணி சீரியல் மூலம் பிரபலமானவர் மாளவிகா அவினாஷ். தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் என பல மொழியில் நடித்துள்ள இவர், கே.ஜி.எஃப் படத்தில் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
சமீபத்தில், யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர் தனது மகன் கால்வியின் உடல் நிலை குறித்து பல விஷயத்தை வேதனையுடன் பேசி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, சினிமாவிற்கு எந்தவித சம்மந்தமும் இல்லாத குடும்பத்தில் இருந்து தான், நான் சினிமாவிற்கு வந்தேன். அம்மாவிற்கு நடனத்தின் மீது ஆர்வம் இருந்ததால் பள்ளியில் படிக்கும் போதே, பாட்டு டான்ஸ் கற்றுக்கொண்டேன். அப்போதே குழந்தை நட்சத்திரமாக ஒரு சில
திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். அப்படித்தான் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி நடித்துக்கொண்டு இருக்கும் போது தான் அவினாஷ் அவர்களை சந்தித்தேன்.
இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்ததால் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். அதை காதல் என்று சொல்லிவிட முடியாது, எனக்கும் அவருக்கும் 15 வருட வித்தியாசம் என்றார். தொடர்ந்து தனது மகன் குறித்து பேசிய அவர், என் மகன் பார்ப்பதற்கு அழகாக இருப்பான், முக
தோற்றத்திலும் எந்த விதமான வித்தியாசமும் தெரியாது. ஆனால், இவனால் பேச முடியவில்லை என்று பல மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து இருக்கிறேன்.
ஆனால் அதற்கான தீர்வு கிடைக்கவே இல்லை. ஸ்பெஷல் சைல்ட் என்று தெரிந்ததும் இருவரும் மொத்தமாகவே உடைந்து விட்டோம்.
கருவில் இருக்கும் போதே பரிசோதனை செய்து விட்டால், குழந்தை எந்தவிதமான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை கண்டுபிடித்து விடலாம். ஆனால் அப்போது அது இல்லாததால், அது எனக்கு தெரியாமல் போய்விட்டது. சிலர் கருவில் இருக்கும் குழந்தையை அழிக்கலாமா? வேண்டாமா? என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால். உண்மையிலேயே நம்மளால் இந்த உலகத்திற்கு வந்த ஒரு உயிர், எந்தவித தவறும் செய்யாமல் படும் கஷ்டத்தை பார்த்து. ஒரு பெற்றோராலும் சகித்துக் கொள்ளவே முடியாது. அதனால்தான் பாதி பெற்றோர்கள் உடைந்து போய்விடுகிறார்கள் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.