, ,

உலக பட்டினி தினம்… கோவையில் விஜய் ரசிகர்கள் அன்னதானம் .

Spread the love
தமிழக அரசியலில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவக்கிய நடிகர் விஜய்,தனது அரசியல் பயணத்தை தீவிரபடுத்தி வருகிறார்..பல்வேறு நலத்திட்டங்களை வழங்க அறிவுறுத்தி வரும் அவர்,உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும்  ஒருவேளை மதிய உணவு வழங்க வேண்டி தனது ரசிகர்களுக்கு கட்டளை இட்டிருந்தார்.அதன் படி,கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள உழவர் சந்தை பகுதியில்,தமிழக வெற்றி கழகம் ,கோவை தெற்கு  மாவட்ட இளைஞரணியினர்,உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

இதே போல,கோவை பொள்ளாச்சி,வால்பாறை,கிணத்துக்கடவு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட போத்தனூர்,வெள்ளலூர்,சூலூர்,மதுக்கரை மார்க்கெட்,பொள்ளாச்சி,கிணத்துகடவு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தளபதி வெற்றி கழகத்தினரும் உணவு வழங்கியது குறிப்பிடதக்கது.