கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழையால், மலைப்பாதையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. இதனால் இரவு 12 மணி முதல் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

மலைப்பாதையில் பேருந்து ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களும் முன்னேறிச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றன.
இதற்கிடையே, மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் அமைச்சர் சம்பத் ஆகியோர் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளான மாணவர்கள், மேட்டுப்பாளையத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர் கனமழை காரணமாக மலைப்பாதையில் மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
எனவே, நீலகிரி மாவட்டத்தில் நிலவும் மழைச் சூழலைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் 24 முதல் 26ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகள் உதகைக்குச் செல்வதைத் தவிர்த்து, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



Leave a Reply