மகா சிவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மிகச்சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடத்தப்பட்டுவருகிறது. அந்தவகையில், பிப்ரவரி 1ம் தேதி மகா சிவராத்திரியை ஒட்டி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பாரம்பரிய, கலாச்சார, பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.மாலை ஆறு மணியளவில் ஈஷா யோகா மையத்திற்கு வந்த மத்திய அமைச்சர் தியானலிங்க கோயிலில் வழிபாடு செய்தார். தியானலிங்கத்தில் நடைபெறும் பஞ்ச பூத க்ரியையுடன் இவ்விவிழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து லிங்க பைரவி தேவி மஹா யாத்திரை நடைபெற்றது.

இவ்விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு பவ்ய பாரத் பூஷன் விருதுகள் வழங்கப்பட்டன. வயலின் கலைஞர் டாக்டர் என் ராஜம், பரதக்கலை நிபுணர் அலர்மேல் வள்ளி, அறிவியலாளர் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் அதிகாரி டாக்டர். நம்பி நாராயணன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். கிரண் குமார் டாக்டர், வரலாற்றாசிரியர் டாக்டர். விக்ரம் சம்பத். பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால், ஆபரேஷன் சித்தூரில் பங்காற்றிய ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா, வைஸ் அட்மிரல் ராகுல் விகாஸ் கோகுலே, லெஃப்டினண்ட் ஜெனரல் ஏவிஎஸ் ராட்டி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
பின்னர் புகழ்பெற்ற ஆதியோகி சிலை முன்பு நடைபெற்ற மகா சிவராத்திரி விழா கொண்டாட்டங்களில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்திய அமைச்சர் எல் முருகன், முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்திய முன்னாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் நடிகைகள் மௌனி ராய், தமன்னா, சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.என்று எதிர்பார்க்கப்படுகிறது. 112 அடி உயர ஆதியோகி முன்பு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.



Leave a Reply