, ,

இந்திய மருத்துவமனைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கே.எம்.சி.ஹெச் நெ.1 பல்துறை மருத்துவமனையாகத் தேர்வு

kmch hospital
Spread the love

இந்திய மருத்துவமனைகளில் செயல்திறனை ஆராய்ந்து அதனடிப்படையில் பிரபல ஆங்கில பத்திரிகையான தி வீக் வருடாவருடம் சர்வே நடத்தி வருகிறது. தி வீக் -ஹன்சா ரிசர்ச் சர்வே: இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகள் 2024 என்ற
இதன் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி கேஎம்சிஹெச் மருத்துவமனை இந்த வருடத்திற்கான கோவையின் நெ.1 பல்துறை மருத்துவமனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக கேஎம்சிஹெச் இந்த அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தி வீக் பத்திரிகை சார்பில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற விழாவில் கோவையின் சிறந்த பல்துறை மருத்துவமனை 2024 என்ற பெருமைமிகு விருதைப் தெலுங்கானா மாநிலத்தின் சுகாதாரம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஸ்ரீ தாமோதர் ராஜா நரசிம்மாவிடமிருந்து கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தர கட்டுப்பாட்டு அதிகாரி முத்துசாமி பெற்றுக்கொண்டார்.
“தி வீக் பத்திரிகையின் இந்த ஆய்வானது மருத்துவத் துறையினர் மத்தியில் மிகவும் செல்வாக்கு பெற்றது.
எங்களது தனிச்சிறப்பு வாய்ந்த மருத்துவ சேவைக்கும், மருத்துவமனையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஊழியர்களின் திறமைக்கும் இந்த விருது ஒரு சிறந்த சான்றாகத் திகழ்கிறது. நகரில் நெ. 1 பல்துறை மருத்துவமனையாக தொடர்ந்து ஏழாவது ஆண்டாக
விருது பெறுவது என்பது மிகவும் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரிய விஷயமாகும். கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று, என்றும் நம்பிக்கைக்குரிய மருத்துவமனையாக திகழ்வதையே இந்த விருது சுட்டிக் காட்டுகிறது” என்று கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவரும் நிர்வாக இயக்குனருமாகிய டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தெரிவித்தார்.