, ,

இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு ஆறு தமிழ் திரைப்படங்கள் பரிந்துரை

oscar award
Spread the love

இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு ஆறு தமிழ் திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

உலக அளவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக ஆஸ்கர்  கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும்  சிறந்த திரைப்படங்ளை தேர்வு செய்து  ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும். அதன்படி இந்தியா சார்பில் 28 திரைப்படங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அதிலும் 6 தமிழ் திரைப்படங்கள்  ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றன. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா, சூரியின்  கொட்டுக்காளி, ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மாரி செல்வராஜின் வாழை,ப.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் மற்றும் ஜமா ஆகிய  படங்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.