ஒவ்வொரு நாடும் தனித்துவமான அரிசி வகைகளை உற்பத்தி செய்கின்றன. பெரும்பாலான அரிசி வகைகள் பொதுமக்கள் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் கிடைத்தாலும், ஜப்பானின் ‘கின்மென்மாய் பிரீமியம்’ எனப்படும் அரிசி ஒரு ஆடம்பர பொருளாக மாறியுள்ளது.
இந்த அரிசி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.12,500 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, கின்மென்மாய் பிரீமியம் அரிசி கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் உலகின் மிக விலையுயர்ந்த அரிசியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்படும் இந்த அரிசி, ஜப்பானின் கோஷிஹிகாரி பிராந்தியத்தில் விளைவிக்கப்படுகிறது. இப்பகுதி மலைகளும் குன்றுகளும் சூழ்ந்ததாய் இருப்பதால், அங்குள்ள குளிர்ச்சியான வானிலை அரிசி உற்பத்திக்கு சிறந்ததாக இருக்கிறது.
இந்த அரிசி வழக்கமான அரிசியைவிட ஆறு மடங்கு அதிகமான ‘லிப்போபாலிசாக்கரைடுகள்’ கொண்டுள்ளது. இச்சேர்மம் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பொதுவாக அரிசி சமைப்பதற்கு முன் பல முறை கழுவப்படுகிறது. ஆனால் கின்மென்மாய் பிரீமியம் அரிசி முன்பே சுத்தம் செய்யப்பட்டு வருவதால், அதை மீண்டும் கழுவ தேவையில்லை. மேலும், ஒவ்வொரு அரிசி மணியும் உயர் உயிர் ஆற்றல் மற்றும் தரச் சிறப்பை உறுதி செய்ய கையால் தேர்வு செய்யப்படுகிறது.
இந்த அரிசியை உருவாக்கியவர் டோயோ ரைஸ் கார்ப்பரேஷன் தலைவர் கெய்ஜி சைகா. அவர் 2016ஆம் ஆண்டு கின்மென்மாய் பிரீமியம் அரிசியை அறிமுகப்படுத்தினார். அப்போது 840 கிராம் கொண்ட ஒரு பெட்டி ரூ.5,490க்கு விற்பனை செய்யப்பட்டது.
அந்நேரத்தில் சாதாரண அரிசி வகைகள் கிலோவுக்கு ரூ.173 முதல் ரூ.232 வரை விலை கொண்டிருந்தது. ஆனால் தற்போது, ஒரு கிலோ கின்மென்மாய் பிரீமியம் அரிசி ரூ.12,557க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆத்தி… ஒரு கிலோ அரிசி விலை ரூ.12,500: அபபடி என்ன ஸ்பெஷல்?



Leave a Reply