,

அழகாக பாடல் எழுதிய அழுகுணி சித்தர்

அழுகுணி சித்தர்
Spread the love
அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகுணிச் சித்தர் என்று ஆகிவிட்டது. இவர் ஒரு வார்த்தைக்கு முற்றிலும் மாறுபட்ட இரு பொருள் வரக்கூடிய விதமாக எழுதுவதில் வல்லவர்.இந்த உலகத்தில் பொருள் அதாவது பணம் வேண்டுமென்றால், பலரிடம் பேரிடம் தாழ்ந்து போக வேண்டி இருக்கிறது, கை கட்டி நிற்க வேண்டி இருக்கிறது இந்த நிலைக்கு என்னை ஆளாக்காமல் என்றும் நிலைக்கும் பொருளான மெய்ஞானத்தை எனக்கு தர வேண்டும் என்று அன்னை பராசக்தியை வேண்டுகிறார். இவருடைய பாடல்களில் அணி அழகாக அமைந்து இருப்பதால் அழகு அணிச் சித்தர் என்ற பெயர் இவருக்கு வந்ததாக கூறுவார்கள். இவருடைய பாடல்களில் யோகம் பற்றிய அழமான கருத்துக்களே அதிகமாக உள்ளது.

ஏதாவது ஒன்று கிடைக்கவேண்டுமென்றால் குழந்தைகள், அழுது அடம்பிடித்து பெற்றோரிடம் எளிதாகப் பெற்றுவிடுவர். இதைப்போலவே தனக்கு முக்தி கிடைக்க எண்ணிய சித்தர் ஒருவர், உலகத்தின் அன்னையான அம்பிகை நீலாயதாட்சியிடம் அழுது பெற்றுள்ளார். இதனால் இவர், “அழுகுணி சித்தர்’ என்றே பெயர் பெற்றார். கோரக்கரின் சீடரான அழுகுணி சித்தர், இத்தல அம்பிகை மீது அதீத பக்தி கொண்டு, இங்கேயே தங்கி தினமும் அம்பிகையை வழிபட்டார். அம்பிகையிடம் முக்தி வேண்டி, சிறுவன் போல கண்ணீர் விட்டு அழுது, அடம்பிடித்து பிரார்த்தனை செய்தார். அம்பிகையும் அவருக்கு அருள்புரிய சிவனிடம் வேண்டவே, அவர் சித்தருக்கு முக்தி கொடுத்தருளினார். இவரது ஜீவசமாதி இக்கோயிலில் உள்ளது.

அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகணிச் சித்தர் என்று ஆகிவிட்டது. இவருடைய பாடல்களில் அணி அழகாக அமைந்து இருப்பதால் அழகு அணிச் சித்தர் என்ற பெயர் இவருக்கு வந்ததாக கூறுவார்கள். இவருடைய பாடல்களில் யோகம் பற்றிய அழமான கருத்துக்களே அதிகமாக உள்ளது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, பாடல்களின் சந்தம் படிப்பவர்களை மயக்கும் விதத்தில் உள்ளது என்பது என்னமோ உண்மை.

நாகப் பட்டினத்தில் உள்ள நீலாய‌தாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இவர் சமாதி இன்றும் உள்ளதாக சொல்லப்படுகிறது. தாடியும் முடியுமாக அந்த மனிதர் நடந்து கொண்டிருப்பார். அவர் கண்களிலிருந்து நீர் ஊற்றிக் கொண்டிருக்கும். அவரை அங்கே பார்த்தேன், இவ்விடத்தில் பார்த்தேன் என்பார்கள். ஆனால் எங்கும் தங்க மாட்டார். முடிவில்லாத வழிப்பயணத்தில் போய்க் கொண்டே இருப்பார். யார் எது கேட்டாலும், பதில் கூறவும் மாட்டார். அவர் கண்கள் மட்டும் அழுது கொண்டே இருக்கும். இதனாலேயே இச்சித்தருக்கு அழுகண் சித்தர் என்று வழங்கினர். காலப்போக்கில் அழுகண்ணர் என்றும் அழுகணிச் சித்தர் என்றும் அழுகுணிச் சித்தர் என்றும் வழங்கினர் என்பதும் தெரிய வருகிறது. இச்சித்தர் ஊரைப் பார்த்து அழுதார். உலகைப் பார்த்து அழுதார், தன்னையே பார்த்தும் அழுதார்.

நாகப்பட்டினத்தில் உள்ள சிவபெருமான் கோயில் வளாகத்திலேயே அழுகுணி சித்தர் சமாதியும் உள்ளது.