தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் புகைப்படங்களை வைக்கக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, அரசு அலுவலகங்களில் புகைப்படங்கள் வைக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டிருந்தாலும், அதை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. மேலும், புகைப்படங்களுடன் உள்ளே செல்ல காவல்துறையினர் அனுமதிக்காததால், ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் ஈஸ்வரன், “தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைப்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் பெரியார், அண்ணா, அம்பேத்கர் புகைப்படங்களை வைக்க வேண்டும். அரசாங்கம் இதனைச் செய்யவில்லை என்றால், மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே புகைப்படங்களை வைப்போம்” என எச்சரித்தார்.
மேலும், தமிழ்நாடு அரசின் அரசாணையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், எளிய மக்கள் அதிகமாக வந்து செல்லும் இடங்களில் இவர்களின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



Leave a Reply