,

அந்தமான் நிக்கோபாரின் தலைநகரம் போர்ட் பிளேயரின் ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம்

andaman nicobar
Spread the love

அந்தமான் நிக்கோபாரின் தலைநகரம் போர்ட் பிளேயரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

இது ​குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்,​ நாட்டை காலனி ஆதிக்கத்தின் சுவடுகளில் இருந்து விடுவிக்கும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்