X தளத்தில் நீங்கள் எழுதியதை வீடியோவாக மாற்றும் அம்சத்தை உள்ளடக்கிய க்ரோக் AI – 3 ஐ அறிமுகப்படுத்தியுள்ளார் எலான் மஸ்க்.
Twitter – ஐ எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடியான மாற்றங்களை உருவாக்கி வருகிறார். Twitter ஐ வாங்கிய கையோடு அதன் பெயரை X என்று மாற்றினார். பிறகு, AI தொழில்நுட்பங்களைப் புகுத்தத் தொடங்கினார். அதற்கு க்ரோக் என்றும் பெயர் வைத்து, முதற்கட்டமாக க்ரோக் 1 என்கிற முதல் மாடலை 2023 நவம்பர் மாதம் கொன்டு வந்தார். இது முதல் கட்டமாக தகவல்களைத் திரட்டவும், புகைப்படங்களை உருவாக்கவும் உதவி செய்தது. அடுத்தது க்ரோக் – 2 ஐ செயல்படுத்தினார். இது முதல் மாடலை விடவும் வேகமாக செயல்பட்டது. இதையடுத்து தற்போது மூன்றாவது மாடலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
க்ரோக் 2 ஐ விடவும் அதிக தகவல்கள் இருப்பதாகவும், கேட்கும் கேள்விகளுக்கு விரைவாக பதில் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முந்தைய மாடல்களை விட கேள்விகளைப் புரிந்துகொண்டு உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நுட்பமான கேள்விகளுக்கு பயனுள்ள பதில்கள் கொடுக்கும்படி திறனாக செயல்படுகிறது. மேலும், கட்டுரையாக எழுதுவதை வீடியோவாக உருவாக்க முடியும்.
இனிமேல் நீங்கள் எழுதி கொடுத்தாலே போதும் அது ai மூலம் உங்களுக்கு ஒரு வீடியோவாக எடிட் செய்து கொடுத்துவிடும் எனவும் கூறப்படுகிறது. இந்த அம்சம் குறித்து மட்டும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. செயல்பாட்டுக்கு வந்த பிறகு தான் இது உண்மையா என்பது தெரிய வரும். மேலும், இப்படியான பல அம்சங்களை கொண்ட க்ரோக் 3-ஐ மஸ்க் கொண்டு வந்துள்ளதால் பயனர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Leave a Reply