ஹோட்டல் உணவு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானது என்கிற எண்ணம்தான் பலரது மனதிலும் உள்ளது. இத்தகைய காலக்கட்டத்தில், சில இளைஞர்கள் பாரம்பரிய உணவுகளை வித்தியாசமான முறையில், அறிமுகப்படுத்தி அசத்துகின்றனர். இந்த ரக உணவுகளை பார்த்து மக்கள் ஆச்சரியப்படுத்துவது மட்டுமன்றி இதுபோன்ற உணவுகளை எவ்வளவு விலை கொடுத்தும் சாப்பிடலாம் என்று கருதவும் செய்து விடுகின்றனர்.
அந்த வகையில்,,, கோவை சிங்காநல்லூரில் அடுப்பில்லாமல், எண்ணெய் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கையான முறையில் ஒரு உணவகம் இயங்கி வருகிறது. அதன் பெயர் ‘படையல் இயற்கை உணவகம்’. இதுதான், உலகின் முதல் அடுப்பில்லாத உணவகம் ஆகும். இந்த உணவகம் கோவையைச் சேர்ந்த படையல் சிவா என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது.
இங்கு வடை பாயாசத்துடன் முழுமையான மதிய உணவும் வழங்குகின்றனர். அந்த முழு மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், காரக்குழம்பு, பொரியல், அவியல் என அனைத்தையும் அடுப்பே இல்லாமல் சமைத்து பரிமாறுகின்றனர். இவர்களின் உணவில் பழங்கள் , நாட்டுக் காய்கறிகள்தான் அதிகமாகப் பயன்படுத்துக்கின்றனர். மசாலா என்றால் மிளகு, சீரகம் மற்றும் உப்புதான் பிரதானமாக பயன்படுத்துகின்றனர்.
இங்கு தயிர் சாதம் மிகவும் ஸ்பெஷல். இங்கு சாதாரணமாக பாலிலிலிருந்து தயாரிக்கும் தயிரைக் காட்டிலும் தேங்காய் பாலை 12 மணி நேரம் ஊற வைத்து தயிராக்கி அதை தயிர் சாதமாக செய்கின்றனர். அதில் , கூடுதல் சுவைக்கு மாதுளை கேரட் போன்றவற்றையும் கலந்து செய்கின்றனர்.
முழுக்க முழுக்க இயற்கையை மட்டுமே நம்பி இந்த உணவகம் இயங்கி வருகிறது. இங்கு சாப்பிடும்போது மனம் நிறைவடைவதாக வாடிக்கையாளர்கள். தெரிவிக்கின்றனர். திருமண வீடுகள், விருந்து வீடுகளுக்கும் இந்த ரக உணவுகள் பரிமாறப்படுகிறது. இந்த தொழிலை பெரிய அளவில் கொண்டு சென்றால் மற்ற கமர்ஷியல் உணவகங்களைப் போல் இதிலும் லாபம் பார்க்கலாம் என்கிறார் படையல் சிவா.



Leave a Reply