“உங்களுடன் ஸ்டாலின், உங்கள் வீடு தேடி வரும் அரசு” என்ற திட்டத்தின் முகாமை கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் துவக்கி வைத்தார் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார்.
இன்றைய தினம் தமிழக முதல்வரின் அறிவுறுத்தல் படி, உங்களுடன் முதல்வர் ஸ்டாலின் திட்டம் கோவை மாவட்டத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் 6 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. அதில் இன்றைய தினம் வார்டு 36 மற்றும் 39 வது பகுதிகளில் இந்த முகாம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதில் எல்லாத் துறைகளையும் சேர்ந்த 42 சேவைகள் வழங்கப்படுகிறது. இதே கேம்ப் நடைபெறும் இடத்தில் மகளிர் உரிமை தொகை காண, விண்ணப்ப படிவங்களும் வழங்கப்படுகிறது.
அதேபோல சுகாதார முகாம், காவல்துறை சார்பாக may I help you உள்ளிட்ட சேவைகள் இன்று வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினார்.
நிபா வைரஸ் குறித்த கேள்விக்கு,
சுகாதாரத்துறை சார்பாக மாவட்ட எல்லைகள் தீவிர கண்காணிப்பு நடத்தப்படுகிறது. ஆனால் இதுவரை அதுபோன்ற சீரியஸ் டேஸ்கள் எதுவும் இல்லை. அதற்கு உண்டான அறிவுரைகள் சுகாதாரத் துறை மூலம் வழங்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. பொதுமக்கள் பயப்பட வேண்டிய தேவை கோவை மாவட்டத்தில் இல்லை எனக் கூறினார்.
Leave a Reply