Tag: #viduthalaisiruthaigal
-
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அண்ணா பல்கலைக்கழக விவகாரம் மிகுந்த வேதனைக்குரியது. இதில் தொடர்புடைய குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. அந்த குற்றச்செயலில் தொடர்புடையவர்கள் வேறு யாராக இருந்தாலும் அனைவருமே கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு உடனடியாக பிணை வழங்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறைக்குள் வைத்திருந்தே விசாரணை மேற்கொள்ள வேண்டும். அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்புகிறார். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக எதிர்க்கட்சி…
-
விசிக மது ஒழிப்பு மாநாடு இப்போது மகளிர் மாநாடாக மாறியுள்ளது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “விசிக மது ஒழிப்பு மாநாடு இப்போது மகளிர் மாநாடாக மாறியுள்ளது. துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் தமிழக அரசு அவசரம் காட்டவில்லை ஏன்? துணை முதல்வரை நியமிப்பதில் மட்டும் தமிழக அரசுக்கு அவசரம். தந்தை முதல்வர், மகன் துணை முதல்வர் என்றால் இங்கு…
-
கும்பகோணம் அடுத்த சோழபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “டெல்லியில் உள்ளது போல் தமிழகத்தில் ஆட்சியை பிற கட்சிகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலையில் திமுக, அதிமுக இல்லை. மக்களின் செல்வாக்கு ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் உள்ளது. எனவே ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பேசினார்.
-
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளை கண்டித்தும் கோவணம் கட்டி கொண்டும், திருவோடு ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை நிர்வாகி உட்பட அக்கட்சியினர் போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்ட ஆதிதிராவிடர் துறை சார்பில் ஆதிதிராவிடர் மக்களுக்கான வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்து, விசாரணை முடிந்த பிறகும் பட்டா வழங்காமல் இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளை கண்டித்து,…
-
தமிழகத்தில் சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் ஒன்றினைந்த கோவை மாவட்டங்கள் சார்பாக நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மதிமுக, திமுக, காங்கிரஸ் இயக்கங்கள் பங்கேற்றன. மறுமலர்ச்சி திமுக சார்பில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராசு, கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் அ.சேதுபதி, இராமநாதபுரம் பகுதி செயலாளர் பொ.சு.முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் மார்க்கெட் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.