Tag: #vayanadu

  • வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்கள் தள்ளுபடி……. – கேரளா வங்கி அறிவிப்பு

    வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை கேரள வங்கி தள்ளுபடி செய்துள்ளது. கேரள வங்கி என்பது கேரள மாநில அரசிற்கு சொந்தமான கூட்டுறவு வங்கியாகும். கேரள மாநிலம் முழுவதும் கிளைகள் உள்ள இந்த வங்கிக்கு வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலையிலும் ஒரு கிளை உள்ளது. சூரல்மலை கிளையில் கடன்பெற்று, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோரின் கடன்களை தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே கேரள வங்கி, முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.50…

  • வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்…

    கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று (சனிக்கிழமை) நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் பார்ப்பதற்காக விமானம் மூலம் இன்று காலை கேரளாவின் கண்ணூர் விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்து இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் காலை 11.15 மணியளவில் வயநாடு புறப்பட்டார். வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால்…

  • இன்று வயநாடு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி ……..

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் நேரில் சந்தித்து பேச உள்ளார். கேரள மாநிலம், வயநாடு பகுதியில் பெருமழை காரணமாக கடந்த 30-ம் தேதி அதிகாலை நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதன் காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 11-வது நாளாக நேற்று மீட்புப் பணி நடைபெற்றது. இதுவரை 427 பேர் உயிரிழந்துள்ளனர். 273 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 138 பேரை காணவில்லை. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று…

  • வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிவாரணத்தொகை.. ..

  • Untitled post 3579
    , ,

    நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதிக்கு எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, தனது தங்கை பிரியங்கா உடன்  கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையம்  வந்தார். இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டுக்கு, முன்னாள் வயநாடு தொகுதி எம்.பி.யும், தற்போதைய  மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி ஆகியோா் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம்   இன்று  காலை 10.30 மணியளவில் கேரளம் மாநிலம் கண்ணூர் விமான நிலையம் வந்தடைந்தனர். வயநாடு பகுதியில் நிலச்சரிவு…

  • 3 நிலச்சரிவுகள்……. 45 பேர் மரணம் – அச்சம் தரும் வயநாடு

    கேரளா மாநிலம் வயநாடு அருகே உள்ள சூரல்மலைப் பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 45-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் இந்த நிலச்சரிவுகளில் 400க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அப்பகுதியில் உள்ள ஆறுகளில் காட்டாற்று  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் வயநாடு சூரல்மலை பகுதியில் கேரளா மின்சார வாரியம் கட்டிய அணையும் நிரம்பியதால்,  நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  சூரல்மலை பகுதியில் இடைவிடாத பெய்துவரும் கனமழை காரணமாக…