Tag: #vandebharat
-
கோவை-பெங்களூரு இடையேயான தமிழ்நாட்டின் 4-வது வந்தே பாரத் ரயிலின் சேவை தொடங்கப்பட்டது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில் இருந்து இந்தியாவின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூர் வரை செல்லும் 8 ரயில் பெட்டிகள் கொண்ட கோவை-பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவையை அயோத்தியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார். இதனை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,…
-
வந்தே பாரத் ரயில்கள் மீது சில சமூக விரோதிகள் கல்வீசும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 07/12/2023 வியாழன் இரவு சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பீளமேடு மற்றும் வடகோவை ரயில் நிலையங்கள் இடைப்பட்ட பகுதியில் கடந்த போது, மர்ம நபர்கள் சிலர் ரயில் மீது கற்களை வீசியுள்ளனர். இந்த சம்பவத்தில் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. இதுகுறித்து சவ்ரவ் குமார், சேலம் கோட்ட ஆணையர்,…