Tag: #ugc

  • கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் யுஜிசி நகல் எரித்து போராட்டம்

    பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே நியமிப்பார் என்ற  யுஜிசி யின் புதிய வழிகாட்டுதலை கண்டித்தும் துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே நியமிக்கும் யுஜிசியின் அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு  இந்திய மாணவர் சங்கம் சார்பில் யுஜிசி நகல் எரித்து போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அகமது ஜில்பிகர் தலைமை தாங்கினார். போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் தினேஷ் ராஜா உரையாற்றினார்.

  • பொறியியல் கல்லூரிகளில் பி.பி.ஏ., பி.சி.ஏ., பட்டப்படிப்புகள், ஆரம்பிக்க ஏ.ஐ.சி.டி.இ. முடிவு-  தனியார் கலை அறிவியல் கல்லூரி அசோசியேசன் கண்டனம்

    தமிழ்நாடு தனியார் சுயநிதி கலை, அறிவியல் மேலாண்மை கல்லூரி நல சங்கத்தினர் கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், தொழில்நுட்பம் சாராத கலை அறிவியல் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வரும் பி.பி.ஏ., பி.சி.ஏ. ஆகிய படிப்புகளை 2024-25-ம் கல்வியாண்டில் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் கொண்டு வர உள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அறிவித்து உள்ளது. பி.பி.ஏ., பி.சி.ஏ. படிப்புகளை நடத்தும் கலை, அறிவியல் கல்லூரிகள் ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி பெறவேண்டும் என்ற புதிய அறிவிப்பும்…