Tag: #tact #focea #electricityhike

  • கோவை மாவட்ட தொழில் அமைப்புகளில் கூட்டமைப்பான போசியாவின் சார்பில் தலைமை மின்பொறியாளரிடம் மனு

    கோவை மாவட்ட தொழில் அமைப்புகளில் கூட்டமைப்பான போசியாவின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஜே. ஜேம்ஸ் தலைமையில் நூற்றுகணக்கான தொழில் முனைவோர்கள் டாடாபாத்தில் உள்ள மின்சார வாரியத்தின் கோவை மாவட்ட தலைமை மின்பொறியாளரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “கோவை மாவட்ட மின்பகிர்மானத்துக்கு உட்பட்ட பகுதியில் 18 கிலோ வாட்டுக்கு குறைவான மின்இணைப்பு பெற்று குறுந்தொழில் முனைவோர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஜாப்பாடர்கள் பெற்று தாங்களும் இயந்திரங்களில் பணி செய்தும், தங்கள் சக்திக்கு உட்பட்டு குறைந்த பட்சம்…

  • முதல்வருடன் தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் சந்திப்பு

    சென்னை அறிவாலயத்தில் தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலினை தமிழ்நாடு தொழில் துறை மின் நூகோர்வோர் கூட்டமைப்பின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்.ஜேம்ஸ், ஜெயபால், முத்துரத்தினம், ராஜப்பா, ராஜமாணிக்கம், பொன்.குமார்,  சாகுல் அமீது, கோவிந்தராஜ், ஜெயபாரதி, முரளி, நடராஜன் உள்ளிட்டோர் சந்தித்து நிலை கட்டணம் திரும்ப பெற வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்த உள்ள மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். தேர்தல் நடைமுறை முடிந்தவுடன் கோரிக்கை சம்பந்தமாக நல்ல முடிவுகள் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர்…

  • மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் மனித சங்கிலி ஒத்திவைப்பு

    தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்  COWMA அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜே.ஜேம்ஸ் மற்றும் எம்.ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  ஒருங்கிணைப்பாளர் ஜே.ஜேம்ஸ் பேசியபோது, ” மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் சார்பில் வருகின்ற 12.12.2023 அன்று மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி எட்டாம் கட்டம் இயக்கமாக தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி இயக்கம் நடத்த முடிவு செய்திருந்தோம். சென்னையில்  புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் கடுமையாக இருந்து வருவதாலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,…

  • மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி டிசம்பர் 12 ல் மனித சங்கிலி போராட்டம் – தொழில் துறையினர் அறிவிப்பு

    கோவையில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்ட் ஜேம்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் உள்ள தொழில் துறை நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு திரும்ப பெற வேண்டும் என்பது பிரதான கோரிக்கை, இதில் கடந்த 90 நாட்களாக கிட்டத்தட்ட எட்டு கட்ட போராட்டம் நடத்தினோம்.இதில் தமிழக முதலமைச்சர் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து துறை அமைப்புகளுடன் சேர்ந்து…