Tag: #sriramakrishnahospital

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் உடல் உறுப்புகள் தானம் செய்ய கியூஆர் கோடு அறிமுகம்

    கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவ மனை, உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன்படி, ஒரு லட்சம் உடல் உறுப்பு தானதாரர்களை, “கியூஆர் கோடு” வழியாக பதிவு செய்யும் திட்டத்தைத் தொடங்கி, செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தக்சின் பாரத் ஏரியா ஜெனரல் கமாண்டிங் அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் கரன்பிர் சிங் பரார்…

  • கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு புகழ்பெற்ற ‘சஞ்சீவனி ஹெல்த்கேர் எக்ஸலன்ஸ்’ விருது

    புதுதில்லியில்​ உள்ள யஷோபூமி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2024 சஞ்சீவனி ஹெல்த்கேர் எக்ஸலன்ஸ் விருதுகள் நிகழ்வில்  கோவையில் செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை “தெற்கு மண்டலத்தில் வேகமாக வளர்ந்து வரும் மிகச் சிறந்த மருத்துவமனை” என்ற பிரிவில் சஞ்சீவினி விருதைப் பெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையை நடத்தும் எஸ். என். ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் இந்த விருதை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ​எஸ். அழகப்பன் இ​ணைந்து பெற்று கொண்டார். மத்திய வர்த்தகம் மற்றும்…

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் பேரிடர் கால அவசர திறன் ஒத்திகை பயிற்சி

    ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் பேரிடர்கால வெளிப்புற ஒத்திகை பயற்சியை நடத்தியது. பேரிடர் காலங்களில் நடக்கும் விபத்துகளை சமாளிக்க மருத்துவ பணியாளர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதிரி ஒத்திகை பயிற்சிகளை நடத்துகிறது. இப்பயிற்சியானது அவசரகால சூழ்நிலையில் முதல் ஒரு மணி நேரத்திற்குள் உயிர்களைக் காப்பாற்றும் ‘கோல்டன் ஹவர்” என்ற கருத்தை எடுத்துரைக்கிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் ‘பேரிடர்கால ஒத்திகை பயிற்சி’யை…

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இருதய ஆரோக்கியம் சிகிச்சைகள் குறித்த கண்காட்சி  

    ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இருதய ஆரோக்கியம்  மற்றும் சிகிச்சைகள்  குறித்த  மாபெரும்  கண்காட்சியை  துவக்கியது. வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு இருதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை  எடுத்துரைக்க  ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இருதய ஆரோக்கியம் குறித்த  கண்காட்சியை துவக்கியது . இதன் முக்கிய நோக்கம்  பொதுமக்கள் அனைவருக்கும் இருதய ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இந்த இருதயவியல் கண்காட்சியை செப்டம்பர் 21 அன்று  புரூக்பீல்ட்ஸ்மாலில் கோவை மாவட்ட ஆட்சியர்,  கிராந்தி குமார் பதி,  எஸ். என். ஆர் சன்ஸ் சாரிட்டபிள்…

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இதய நோய்களுக்கான அதிநவீன கிரையோ அபலேசன் கருவி அறிமுகம்

    கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பல்நோக்கு மருத்துவமனையில் அரித்மியா போன்ற தீவிரமான இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்  அதிநவீன கிரையோ அபலேசன் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்வில் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லக்ஷ்மி நாராயணசுவாமி கிரையோ அபலேசன் கருவியை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அறிமுகப்படுத்தினார். இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், தலைமை நிர்வாக அதிகாரி, சி.வி. ராம் குமார், இத்தாலியின் மோன்சினோ இருதயவியல் மையப் பேராசிரியர் கிளாடியோ டோன்டோ, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால்,…

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

    விபத்து மற்றும் அவசரகால நேரங்களில், மருத்துவ சேவைகள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் வந்து சேர்வதை உறுதி செய்வதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. நிகழ்ச்சியில் மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ்.ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் ஆகியோர் உடனிருந்து, ஆம்புலன்ஸ் ஆபரேட்டர்களின் பங்கு குறித்து விளக்கினர். அவசர சிகிச்சை பிரிவு ஆலோசகர் டாக்டர். என். மஞ்சுநாதன், மிகப்பெரும் விபத்தின் ஆரம்ப…

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு ‘எக்சலன்ஸ் இன் மல்டி ஸ்பெஷாலிட்டி’ விருது

    கோவையில் நடைபெற்ற ஈடி எக்ஸலன்ஸ் விருதுகள் 2023 நிகழ்ச்சியில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக எகனாமிக் டைம்ஸ் ‘எக்சலன்ஸ் இன் மல்டி ஸ்பெஷாலிட்டி விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது. கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் இந்த விருதை இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் மற்றும் எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரி சுவாதி ரோஹித் ஆகியோருக்கு வழங்கினார்.