Tag: #sriramakrishnacollegeofartsandsciene
-
கலாம் வேர்ல்டு ரெக்கார்டஸ் அமைப்பு சார்பில், மகளிர் தின விழாவையொட்டி, பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்து வரும் பெண்களுக்கு 13-வது ஆண்டு விருது வழங்கும் விழா, சென்னை தரமணியில் உள்ள டீச் கலையரங்கில் மார்ச் 8-ம் தேதி நடைபெற்றது. அதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் உணவு மற்றும் விடுதி அறிவியல் துறை இரண்டாமாண்டு மாணவியும், சமையல் கலைஞருமான டி.எப். சமீமாவுக்கு, “பெண்களுக்கு ஊக்குமளிக்கும் சாதனையாளர்” என்ற விருது வழங்கப்பட்டது. சமையல் கலையில் சாதனை…
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கல்லூரி கலையரங்கில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு மையத் தலைவர் முனைவர் ஜி.கவிதா ஆண்டறிக்கை வாசித்தார். தேகா ஆர்கானிக்ஸ் நிறுவனர் ஆர்த்தி ரகுராம், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மகளிர் மேம்பாட்டு மைய சாதனை மலரை…
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், அறிவியல் மன்றம் சார்பில், தேசிய அறிவியல் தின விழா, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். பாரதியார் பல்கலைக்கழக வளாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் விஞ்ஞானி முனைவர் கே.கதிர்வேலு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். அதைத்தொடர்ந்து, அறிவியல் தினத்தையொட்டி மாணவ, மாணவிகளிடையே…
-
கோவை மாநகரக் காவல்துறையும் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்தும் கோவை மாநகரக் கல்லூரிகளுக்கு இடையிலான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மௌன நாடகப் போட்டி கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்வுக்குக் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்து, வரவேற்றுப் பேசினார். கோவை மாநகரக் காவல் ஆணையர் ஏ.சரவண சுந்தர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். இந்தப் போட்டியில் கோவையைச் சார்ந்த பொறியியல், மருத்துவம், சட்டம், அலைட்…
-
அத்திப்பாளையம் ஊராட்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் 7 நாள் சிறப்பு முகாம் 16.02.2025 முதல் 22.02.2025 வரை நடைபெறுகிறது. முகாமின் தொடக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் வரவேற்புரையை முனைவர் பிரகதீஸ்வரன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வழங்கினார். தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களுக்கு பூங்கொத்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முகாமின் நோக்கத்தை விளக்கி முனைவர் சஹானா ஃபாத்திமா, ஆர்.ஆர்.சி.திட்ட அலுவலர் உரையாற்றினார். நிகழ்வில் வாழ்த் துரைகளை சுரேஷ்குமார், ஒன்றிய…
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவ மனை, உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன்படி, ஒரு லட்சம் உடல் உறுப்பு தானதாரர்களை, “கியூஆர் கோடு” வழியாக பதிவு செய்யும் திட்டத்தைத் தொடங்கி, செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தக்சின் பாரத் ஏரியா ஜெனரல் கமாண்டிங் அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் கரன்பிர் சிங் பரார்…
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்34-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை வகித்தார்.ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற்றுப் பேசி, கல்லூரியின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தக்ஷின் பாரத் ஏரியா ஜெனரல் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கரன் பிர் சிங் பரார் கலந்து கொண்டு, 1,584 இளநிலை…
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டின் 76-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் விழாவிற்குத் தலைமை வகித்தார். மாணவர் பேரவைத் துணைத்தலைவர் எம்.கருப்புசாமி வரவேற்றார். தமிழ்நாடு விமானப்படை தேசிய மாணவர் படை கமாண்டிங் அலுவலர் எம்.பர்குணன், விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு, நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் பேண்டு வாத்திய இசைக்குழு மாணவர்களின்…
-
கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் கிரிக்கெட் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான 8 ஓவர் மகளிர் கிரிக்கெட் போட்டி, ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் உள்ள கோபி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மகளிர் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது. அதன் விவரம்…
-
நாட்டின் 76வது குடியரசு தினவிழா, வரும் ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தலைநகர் புதுதில்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அன்று நடைபெற உள்ளன. இதற்காக முப்படையினர், காவல்துறையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளநிலை வேதியியல் இரண்டாம் ஆண்டு மாணவி த.திரிஷா, குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க தேர்வு…