Tag: #srcw
-
ஶ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பாரதியாரின் 143 ஆவது பிறந்தநாள் பாரதி கண்ட புதுமைப் பெண்களால் புதுமையாகக் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் கி. சித்ரா அவர்கள் தலைமையுரையாற்றினார். ”பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகிய நீங்கள் பாரதியாரின் வைர வரிகளை நினைவில் கொண்டு, சரித்திரம் படைத்திடுங்கள்” என்று மாணவியருக்கு உத்வேகம் ஊட்டினார். மாணவியர்கள் பாரதியார் வேடமிட்டும், பாட்டுப்போட்டியிலும் காணொலிக்காட்சி உருவாக்கும் போட்டியிலும் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற மாணவியருக்குப் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக …
-
கோவையில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் அனைத்துக் கல்லூரி மாணவிகளுக்கான கலைத்திருவிழா ‘பிரயுக்தி – 2024’ நடைபெற்றது. அழகுக்கலைகள், வீடியோ உருவாக்கம், தனித்திறன்கள், சமையல் கலை, பாடல், ஃபேஷன் வாக், நடனம் என்று களைகட்டிய பலவிதமான போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கல்லூரி மாணவிகளின் கலையாற்றலையும் பல்வேறு திறமைகளையும் வெளிப்படுத்ததுவதற்கு வாய்ப்பாக அமைந்த இக்கலை திருவிழாவில் சுமார் 275 மாணவியர் பங்கேற்றனர். இளம்பெண்கள் தங்களுடைய கற்பனை ஆற்றலையும் திறமைகளையும்…
-
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பிங்க் ஸ்டார்ஸ் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இசை, நடனம், வெஜிடபிள் கார்விங், ஆர்ஜே தேடல் என மாணவிகளின் கலைத்திறமைகளை வெளிப்படுத்தும் பலவிதமான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆர்வத்துடன் தங்கள் திறமைகளை அரங்கேற்றிய மாணவிகளுள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் பரிசையும் பாராட்டையும் பெற்றனர். கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா இதுகுறித்து கூறும்போது, கல்வியோடு மாணவிகளின் தனித்திறமைகளையும் கலையார்வத்தையும் ஊக்குவிப்பதன் மூலம் இளைய தலைமுறையை ஆக்கப்பூர்வமான வழிகளில் செயல்பட வழிகாட்டலாம். அவர்களின் கற்பனையாற்றலும் தன்னம்பிக்கையும்…
-
மாணவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தந்தால் பல திறமையாளர்களை உருவாக்க முடியும் என்ற நோக்கில் கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கான வணிக வைபவ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலைத்திறனோடு கூடிய அரங்குகள், உணவு, உடை, அழகுசாதனப் பொருட்கள், பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் என்று பலவிதமான விற்பனையகங்களை மாணவிகள் அமைத்திருந்தனர். வி.ஜி விளம்பர நிறுவனத்தின் சிஇஓ வி.கீதா விற்பனையைத் துவக்கிவைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா கூறும்போது, இந்த வணிக வைபவ் நிகழ்ச்சியின் மூலம் மாணவிகளின்…
-
தமிழர் திருநாளாம் தைத்திருநாள் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கோவையில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பாரம்பரியப் பண்பாட்டு விழாவாகப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழர் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் பட்டிமன்றம், கிராமிய நடனங்களோடு பொங்கல் வைத்துக் கொண்டாடிய மாணவிகள் பொங்கல் விழாவின் அங்கமான உறியடித்தலில் ஆர்வத்தோடு பங்கு கொண்டனர். பொங்கல் விழாவின் முக்கியத்துவத்தையும் பொங்கல் வைக்கும் முறையையும் இன்றைய இளம் தலைமுறை அறிந்து கடைபிடித்தது பாராட்டத்தக்கதாக இருந்தது. கல்லூரியெங்கும் வண்ணக்…