Tag: #sivaguruprabhakaran
-
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள ஏரியில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அறிந்து, இந்த நீரை அங்கு நிரப்பினால் சுற்றுச்சூழல் மாசு அடையும் என்பதால் சுத்திகரிக்கப்பட்ட நீரை அந்த ஏரியில் நிரப்பும் திட்டத்தை கைவிடவும், சின்னவேடம்பட்டியில் 2வது வார்டில் உள்ள பூங்காவை சீர்படுத்தி அதை முறையாக பராமரிக்க வேண்டியும், மேலும் கோவை விமான நிலையம் அருகே 23 வார்டு அசோக் லே அவுட் பகுதியில் சாக்கடை வடிகால் அமைக்கவும், எம்.ஜீ.ஆர் நகர்…
-
ஆர் கோல்டு நிறுவனத்தின் சார்பில், கோவை உக்கடம் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிர பாகரன், மாநகர காவல்துறை ஆணையாளர் சரவணசுந்தர், ஆர் கோல்டு நிறுவனர் எம்.எம்.ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர். விழா வின் ஒருபகுதியாக பொள்ளாச்சி புகழ் வள்ளிகும்மி ஆட்டம், கோவை புகழ் சிலம்பாட்டம் நடைபெற்றது. பொங்கல் வைத்தும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய ஆர்…
-
கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு வசதிகள் கொண்ட அவசர சிகிச்சை மையத்தை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி தலைமை உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா. கார்த்திக் , குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின்…
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி ஆகியவை இணைந்து நடத்திய, “வாகை சூட வா” என்ற சிவில் சர்வீஸ் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி,கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். வேலைவாய்ப்புப் பயிற்சி மற்றும் பெறுநிறுவனத் தொடர்பு மைய இயக்குநர் முனைவர் எம்.தாமரைசெல்வன் வரவேற்றுப் பேசினார். கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன்…
-
கோவை மாநகர பகுதியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளை பொதுப்பணித்துறைகளை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு, “கடந்த முறை கோவை வந்திருந்த போது மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டது போல கல்வி நிறுவனங்கள் நிறைந்த கோயம்புத்தூரிலும் நூலகம் கட்ட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனை முதல்வரிடம் எடுத்துச் சென்றேன். அதன் அடிப்படையில் 2024-25 நிதிநிலை அறிக்கையில் கோயம்புத்தூரில் கலைஞர் நூலகம் மற்றும்…
-
தமிழ்நாட்டில் இலக்கை விட கூடுதலாக கொடி நாள் நிதி வசூல் செய்த கோவை மாநகராட்சியை பாராட்டும் வகையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்
-
கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 31வது வார்டில், கட்டப்படும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன் சில தினங்களுக்கு முன் ஆய்வு செய்த போது அடித்தளம் இடுவதற்காக தோண்டப்பட்ட குழிகள் அருகாமையில் உள்ள கட்டிடங்களுக்கு அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தகுந்த பாதுகாப்பு தடுப்புகள் அமைத்து பணிகளை மேற்கொள்ளுமாறு சூயஸ் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மாநகராட்சி ஆணையாளர் அங்கு கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த பொழுது மேற்கூறிய…
-
தமிழக முதல்வர் கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி சார்பில் முடிவுற்ற பணிகளை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி சார்பில் முடிவுற்ற பணிகளை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அதன்படி, ஆடிஸ் வீதி அறிவுசார் மையம், உக்கடம் பெரியகுளம் மேற்கு கரையில் அமைந்துள்ள அனுபவ மையம், குறிச்சி குளக்கரையில் புனரமைத்தல் பணியில் ஒரு அங்கமாக அமைக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர்…
-
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் இணைந்து ரூ.2 லட்சத்தை முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதியாக கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனிடம் வழங்கினர். கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் ரூ.25,000/- மற்றும் கவுன்சிலர் சிங்கை மு.சிவா ரூ.25,000/- நிதி வழங்கினார். மாமன்ற உறுப்பினர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி (இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி) ரூ.25,000/-, ஜி.வி. நவீன் குமார் (இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி) ரூ.15,000/-, ர.பூபதி (இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)…