Tag: #seeman
-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தி.மு.க.விற்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியதை வரவேற்றார். அவர் மேலும், “இதில் முதன்மையான பங்கு எனக்கு இருக்கும். எல்லோரும் ஒன்றாக நிற்பார்கள், ஆனால் நான் தனியாக நிற்பேன். நான் மட்டுமே உறுதியுடன் நிற்கிறேன்,” என்று தெரிவித்தார். சீமான், கோவையில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்கவும், அ.தி.மு.க.வின் முக்கிய தலைவரான…
-
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜரான சீமானிடத்தில் உதவி ஆணையர் செம்பேடு பாபு, துணை ஆணையர் அதிவீரபாண்டியன் மேற்பார்வையில் விசாரணை அதிகாரி அன்புக்கரசு விசாரணை மேற்கொண்டார். முதலில் அவரிடம், அவரது பெயர், ஊர், திருமணம், மனைவி, குழந்தைகள், வேலை, அரசியல் உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பி தகவல்கள் கேட்டு பெறப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடந்த விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. விஜயலட்சுமியுடன் திருமணம் குறித்த கேள் விக்கு, “விஜயலட்சுமியிடம் பழகியது உண்மை தான்.…
-
கோவை நேரு நகர் பகுதியில் தி.மு.க மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சீமான் என்ற போலி பிம்பம் வன்மத்தால் கட்டமைக்கப்பட்டு உள்ளது என்பது தோலுரித்து காட்ட பட்டு உள்ளது. ஈழம் என்கிற அரசியல் 1970-க்கு பிறகு தமிழகத்தில் பல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினர் ஈழத்திற்கு சென்று வந்தாலும் எவ்வித மாறுபாடும் ஏற்படவில்லை ஆனால் சீமான் சென்று வந்த பிறகு தமிழீழ மண் ஒட்டுமொத்த மண் அழிக்கப்பட்டது. சீமான் தமிழீழ…
-
புதிதாக படித்து முடித்து வெளியே வரும் இளம் வாக்காளர்களை குறிவைத்து தான் புதுமைபெண், தமிழ்ப் புதல்வன் போன்றதிட்டங்கள் திமுகவால் கொண்டுவரப்பட்டுள்ளன என சீமான் காட்டம். படித்து முடித்து வெளியே வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுப்பது தான் சரியான திட்டம். அதைவிடுத்து குடும்பத்தில் அம்மா, மகன், மகள் என அனைவருக்கும் தனித்தனியாக ரூ.1000 வழங்குது என்பது திமுக அரசின் கடந்த 3 ஆண்டுகால சாதனைகளில் ஒன்றாக மட்டுமே இருக்குமென்றால், திமுகவை ஆயிரம் ரூபாய் அரசு என்று தான் கூறவேண்டும்…
-
‘இந்தியன் – 2’ திரைப்படத்தை கமல்ஹாசன் மற்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பார்த்து ரசித்தனர். தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 9 மணி அளவில் இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. இந்தியன் 2 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் ஏராளமான ரசிகர்கள் காலை முதலே படத்தை பார்த்து வருகின்றனர், திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டுகளிக்க சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு நடிகர் கமல் ஹாசன் மற்றும் இயக்குனர் சங்கர் ஆகியோர் வருகை…
-
தமிழக அரசியலில் அதிக ஆண்டுகள் ஆட்சி புரிந்த அதிமுக, தற்போது ஆளும் திமுக ஆகிய இரண்டு கட்சிகள் அல்லாத மாற்று அணிகளாக அதாவது, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீத உயர்வை, மற்ற அரசியல் கட்சியினர், அரசியல் நோக்கர்கள், நடுநிலையாளர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு உள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற கால கட்டத்திற்குப்பின் அதாவது ,1952-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் இந்திய தேசிய…
-
நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், ” தேர்தல் ஆணையம், சிபிஐ., போன்ற அமைப்புகள் தன்னாட்சி பெற்றது என்று நினைக்க வேண்டாம். அவர்கள் பாஜக, அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறார்கள். விவசாயி சின்னம் வேறு ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டுவிட்டது. அந்த கட்சி போட்டியிடவே இல்லை. சின்னத்தில் மட்டுமல்ல உண்மையிலேயே சீமான் விவசாயிதான். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் டி.டி.வி தினகரனுக்கு குக்கர் கிடைத்துள்ளது. ஜி.கே.வாசனுக்கு சைக்கிள்…
-
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சீமானுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றால் என்ன என்று தெரியுமா என்று பேசினார். “சீமான் என்னை பற்றி என்ன பேசினார் என்று தெரியவில்லை. அவருடைய சின்னம் வேண்டுமென்றால் முதலில் சீமான் அதற்கு அப்ளை செய்திருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை அதற்கு காரணம் கேட்டால் சென்னையில் வெள்ளம் வந்ததை காரணம் காட்டுகிறார். அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக சீமான் இருந்தால் அந்தச் சின்னம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும். அவர் அங்கீகரிக்கப்பட்ட…
-
மக்களவை தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “வரும் மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. தனித்து போட்டி என்று ஏற்கனவே நாங்கள் அறிவித்துவிட்டோம். எனினும், கூட்டணி அமைக்க சிலர் எங்களிடம் பேசியது உண்மைதான். ரகசியமாகப் பேசினார்கள். அவர்கள் ரகசியமாகப் பேசியதை பொதுவெளியில் சொல்வது மாண்பாக இருக்காது. கூட்டணி பேசியதை எல்லாம் எங்கள் மன்னார்குடியில் கூப்பிட்டார்கள், மாயவரத்தில்…