Tag: #republicdayparade
-
நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார்பாடி வ.உ.சி மைதானத்தில் தேசிய கொடியை பறக்கவிட்டார். தொடர்ந்து மூவண்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் சமாதானத்தை பசைசாற்றும் விதமாக வெண் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அணி வகுப்பு நடத்திய அணித்தலைவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். மேலும் சுதந்திர போராட்ட தியாகியர், தியாகியர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்ப்பட்ட 142 அரசு அலுவலர்கள், 45 காவலர்களுக்கு நற்சான்றிதழ்களும், 61…
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டின் 76-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் விழாவிற்குத் தலைமை வகித்தார். மாணவர் பேரவைத் துணைத்தலைவர் எம்.கருப்புசாமி வரவேற்றார். தமிழ்நாடு விமானப்படை தேசிய மாணவர் படை கமாண்டிங் அலுவலர் எம்.பர்குணன், விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு, நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் பேண்டு வாத்திய இசைக்குழு மாணவர்களின்…
-
நாட்டின் 76வது குடியரசு தினவிழா, வரும் ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தலைநகர் புதுதில்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அன்று நடைபெற உள்ளன. இதற்காக முப்படையினர், காவல்துறையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளநிலை வேதியியல் இரண்டாம் ஆண்டு மாணவி த.திரிஷா, குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க தேர்வு…
-
கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், புதுடெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், “கேலோ இந்தியா-2024” விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று சாதனைப் படைத்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் விழாவிற்குத் தலைமை வகித்தார். கோவை ரெட்ஃபீல்ட்ஸில் உள்ள…
-
நாட்டின் 75வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் வ.உ.சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினம் கொண்டாடப்படும். மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்வார். பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அவர்களுக்கு விருதுகளை வழங்குவார். அதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெறும். இதில் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் பொதுமக்கள்…
-
ஜனவரி 26 ஆம் தேதி தில்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்க வால்பாறையைச் சோ்ந்த பழங்குடியின தம்பதி தோ்வு செய்யப்பட்டுள்ளனா். கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த கல்லாறுகுடி செட்டில்மெண்டில் வசிக்கும் ராஜலட்சுமி என்பவா் ஆனைமலை மலைத்தொடரில் வாழும் பழங்குடியினர் உரிமைக்காக பழங்குடி யின மக்களை ஒன்று திரட்டி தொடர்ந்து அறவழியில் போராடி நிலஉரிமை பெற்று தந்தவர் ராஜலட்சுமி.தன் கிராமத்தை இந்தியாவின் சிறந்த முன் மாதிரி கிராமமாக மாற்றியுள்ளார். இவரது செயலுக்கு பக்க பலமாக இருந்து…
-
நாட்டின் குடியரசு தினவிழா, வரும் ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தலைநகர் புதுடெல்லியில், பிரமாண்ட அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அன்று நடைபெற உள்ளது. இதற்காக முப்படையினர், காவல்துறையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை வணிகவியல் கணக்கியல் மற்றும் நிதியியல் இரண்டாமாண்டு மாணவி என்.வி. பவ்யா, குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க…