Tag: #rameshwaram

  • ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்..!

    ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மரியசியா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 8 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்கிழமை அதிகாலை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட 8 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 8 பேருக்கும் செப்டம்பர் 14 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மீனவர்களை சிறைப்பிடித்ததைக்…

  • எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக  8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை……!

    ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை , எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரை கைது செய்தனர். மேலும் மீனவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்து, அனைவரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

  • 3-ஆவது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள்  வேலைநிறுத்தம்……. – 10 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு

    மீன்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்றாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மீன்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில்  700 – க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு ரூ.10 கோடிக்கு மேல்…

  • 800க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தம்!

    மத்திய, மாநில அரசுகள்  மீன்களுக்கு விலை நிர்ணயம் செய்யக்கோரி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன.  மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடந்த மூன்று வாரமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்று வருகின்றனர். ஆனால், மீனவர்கள் பிடித்து வரும் ஏற்றுமதி தரம்மிக்க இறால், கனவாய், நண்டு உள்ளிட்ட மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால், தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கும் ராமேஷ்வரம் விசைப்படகு மீனவர்கள்…