Tag: #rain

  • கோவையை குளிர்வித்த கோடை மழை

    கோவை மாநகரில் இன்று மாலை 4 மணியிலிருந்து மழை பெய்தது, நகரின் வெவ்வேறு பகுதிகளில் தளிர்த்த குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தது 1 மணிநேரம் தொடர்ந்த மழை வெயிலின் தாக்கத்தை தணித்துள்ளது. காந்திபுரம், கணபதி, டவுன்ஹால், ரேஸ்கோர்ஸ், ராமநாதபுரம், சிங்காநல்லூர், வடவள்ளி, சுந்தராபுரம் மற்றும் சிவானந்தா காலனி ஆகிய பகுதிகளில் நல்ல அளவிலான மழை பெய்தது, மக்களுக்கு ஒரு சிறந்த சலனத்தை ஏற்படுத்தியது. இந்த திடீர் மழை நகர மக்களுக்கான ஒரு சுகமான நிம்மதியாகும்.

  • பொங்கல் வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

    பொங்கல் பண்டிகை வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வடகிழக்கு பருவமழை நிறைவடைந்துவிட்டதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய பாலச்சந்திரன், வடகிழக்கு பருவமழை நிறைவு பெறவில்லை, பொங்கல் வரை தமிழகத்தில் மழை இருக்கும் என கூறினார். 2024ல் 4 புயல்கள் ஏற்பட்டதாகவும், கடந்த ஆண்டைவிட இம்முறை 143 மி.மீ.…

  • வெள்ளகிணறு பிரிவில் மழையால் பாதிக்கபட்ட இடங்களை பார்வையிட்டார் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார்

    கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 14 வார்டு வெள்ளகிணறு பிரிவு, உழைப்பாளர் வீதியில் நேற்றைய கன மழையால் பாதிக்கபட்ட இடங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, அதிகாரிகளை அழைத்து உடனே மழைநீர் வடியவும், பாதிக்கபட்ட இடங்களை சரி செய்யவும் கோவை அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான  பி.ஆர்.ஜி. அருண்குமார் அறிவுறுத்தினார்.  உடன் துடியலூர் பகுதி செயலாளர் வனிதாமணி, 14 வது வட்ட செயலாளர் பிரகாஷ், 1 வது…

  • வடகிழக்கு பருவமழை 15-ந் தேதி தொடக்கம் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

    வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது என்றும், அக்டோபர் 4-வது வாரத்தில் மழை அளவு அதிகரிக்கும், 3 மாதங்களுக்கு மழை இருக்கும் என்றும் தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்தநிலையில் வருகிற 15-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரை கேரளா, தமிழகம்,தெற்கு கர்நாடகா, ராயலசீமா, ஆந்திரப் பிரதேசத்தில் இயல்பைவிட மழை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. இந்திய வானிலை…

  • சோழவந்தான் பகுதியில் சூறைக்காற்றுடன் கன மழை

    மதுரை மாவட்டத்தில், சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. சோழவந்தான், மேலக்கால், முள்ளிப்பள்ளம், திருவேடகம், தென்கரை பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. குறிப்பாக, விவசாயம் நிறைந்த இந்த பகுதியில் தற்போது பெய்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், வெற்றிலைக் கொடிக்கால் மற்றும் வாழை பயிரிட்ட விவசாயிகள் மிகுந்த சோகத்தில் உள்ளனர் . குறிப்பாக, சோழவந்தான் பகுதியில், 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை மற்றும் வாழை பயிரிட்டுள்ளனர்.…

  • தென்மேற்கு வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

    தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடையும்.வரும் 24-ஆம் தேதி காலைக்குள் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் (மே.22,23) கன முதல் மிக…

  • கோவையில் மரம் விழுந்து கார் சேதம்

    கோவையில் கோடை வெயில் தணிந்து தற்பொழுது கோடை மழை துவங்கி உள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கன மழையும் சில இடங்களில் பரவலாக மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று பெய்த கனமழையில் கோவை ஆர்.எஸ்.புரம் பால் கம்பெனியருகே உள்ள மரம் விழுந்து கார் ஒன்று சேதமடைந்தது.

  • மேற்கூரை விழுந்து சேதமான கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தம்

    மழையின் காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள இரும்பினால் ஆன மேற்கூரை திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்களின் ஐந்து இருசக்கர வாகனம் சேதம் அடைந்து உள்ளது.

  • தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!!

    தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், இன்று (வியாழக்கிழமை) முதல் 19-டஆம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன், அதாவது மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் மழை பெய்யக் கூடும் என ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கன்னியாகுமரி, விருதுநகர்…

  • கோவையில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்

    கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள கிராமம், லக்கேபாளையம். இக்கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பஞ்ச கல்யாணி திருமணம் செய்வது என கிராம மக்கள் முடிவு எடுத்தனர். அதன்படி இன்று சுப்பிரமணியர் கோவிலில் கழுதைகளுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தை ஒட்டி லக்கேபாளையம் பகுதியை சேர்ந்த பெண் கழுதை மணமகளாகவும், பக்கத்து கிராமமான கோவில்பாளையம் ஆண் கழுதை…