Tag: #protest

  • கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் யுஜிசி நகல் எரித்து போராட்டம்

    பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே நியமிப்பார் என்ற  யுஜிசி யின் புதிய வழிகாட்டுதலை கண்டித்தும் துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே நியமிக்கும் யுஜிசியின் அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு  இந்திய மாணவர் சங்கம் சார்பில் யுஜிசி நகல் எரித்து போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அகமது ஜில்பிகர் தலைமை தாங்கினார். போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் தினேஷ் ராஜா உரையாற்றினார்.

  • கோவையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததை கண்டித்து பீபில் ஃபார் அண்ணாமலை இயக்கம் ஆர்ப்பாட்டம்

    ​கோவையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் ஓட்டு போட முடியாததை கண்டித்து பீபில் ஃபார் அண்ணாமலை என்ற இயக்கம் சார்பில்  கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  100-க்கும் மேற்பட்டோர்   மக்களவை தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததை கண்டித்து மாவட்ட தேர்தல் அதிகாரியையும் மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கையில் பதாகைகள் வைத்து தேர்தல் ஆணையத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த…

  • முதன்முறையாக வேலை நாட்களில் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆசிரியர்கள்

    ஊதிய முரண்பாட்டை கலைய வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்(SSTA) கடந்த 10 ஆண்டுகளாக போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திங்கட்கிழமை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பும் தொடர் போராட்டத்தை துவக்கி உள்ளனர். அதன்படி கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஊதிய முரண்பாட்டை கலைய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் கலந்து…

  • தரமற்ற பணி பொருட்கள் – கோவை அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

    கோவை அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பினாயில், ஆசிட், பிளிச்சிங் பவுடர் போன்ற தூய்மை பொருட்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவித்து உடல் நலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இருளாயி என்ற தூய்மை பணியாளர், ஆசிட் ஊற்றி மருத்துவமனை கழிவறையை சுத்தம் செய்த போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து அவர் அரசு மருத்துவமனையிலெயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு…

  • வேதநாயபுரம் கிராமத்தில் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 100க்கு மேற்பட்டோர் சாலை மறியல்

    விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே வேதநா யகபுரம் உள்ளது. இக்கிராமத்தில், 100க்கும் மேற்ட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் வழியாக புத்தூர் தளவாய்புரம் மற்றும் இனாம் கோவில்பட்டி வழியாக சங்கரன்கோவில் செல்லும் சாலை அமைந்துள்ளது. கிராம வழியாக கடந்து செல்லும் இருசக்கர வாகனம் முதல் நான்கு சக்கர வாகனம் வரை அதி வேகமாக செல்வதாகவும், இதன் காரணமாக நேற்று மாலை சாலை ஓரமாக எபினேசர் என்பவர் நின்று கொண்டிருக்கும் பொழுது, வேகமாக வந்த இருசக்கர வாகனம்…

  • அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் அங்கன்வாடி மையங்களை முடக்க நினைக்கும் மத்திய அரச கண்டித்து, கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே ஊரகம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் வைத்து, 100க்கும் மேற்ப்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அங்கன்வாடி மையங்களுக்கு புரியாத புது பெயர்களில் திட்டங்களை கொண்டு வந்து நிதியை குறைத்தும் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தை குழியில் தள்ளும் மத்திய அரசின் இடைக்கால் பட்ஜெட்டைக் கண்டித்து,…

  • கோவையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியல்

    காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் ஒரு நாள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராகவும் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். பின்னர் சாலை மறியலில் ஈடுப்பட்ட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர்…

  • பாஜக சார்பில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் சாலை மறியல்

    மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டுக் கடையில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் செய்தனர் . பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முறையாக வரைமுறை செய்யாமல் ,உள்ளூர் காளைகள் மற்றும் உள்ளூர் வீரர்களுக்கு அனுமதி வழங்காமல் தனக்கு வேண்டியவர்களுக்கு அனுமதி வழங்கியதாக தெரிவித்தும், கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு உடனடியாக அலங்காநல்லூர் ஸ்ரீ முனியாண்டி சுவாமி பெயரை வைத்திட கோரியும் ,மாவட்ட நிர்வாகம் நடத்தும் ஜல்லிக்கட்ட…

  • எதிர்கட்சியினரை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் கண்டன ஆர்பாட்டம்

    கோவை சிவானந்தா காலனியில் பாஜக கட்சியின் கோவை மாநகர் ​மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அப்போது இந்தியா கூட்ட​ணிக்கு எதிராகவும் ராகுல் காந்திக்கு எதிராகவும் பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். துணை ஜனாதிபதி, பாராளுமன்ற சபாநாயகரை கேலி,​ கிண்டல் செய்து அவமரியாதை செய்த இண்டியா கூட்டணி கட்சியினர் காங்கிரஸ்,திமுக, கம்யூனிஸ்ட்,திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் சபை நேரத்தில் சபாநாயகரையும் அதே போன்று துணை ஜனாதிபதியும் அவதூறு…

  • பிபிஜி நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

    கோவை சரவணம்பட்டி பிபிஜி நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகள் இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரியில் அடிப்படை வசதி இல்லை என்றும், அதிக கட்டணம் வசூல் செய்வதாகவும், முதலாம் ஆண்டு மாணவர்கள் இரண்டாம் ஆண்டிற்கான கட்டணத்தை கட்டச்சொல்லி நிர்பந்தம் செய்வதாகவும், இரண்டாம் ஆண்டிற்கான கட்டணத்தை முதலாம் ஆண்டிலேயே கட்டினால் தான் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், கட்டணம் கட்டத்தவறும் மாணவ மாணவிகளுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.50-300 வரை அபராதம் வசூலிப்பதாகவும் கூறி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.