Tag: #pongal
-
அண்ணா பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் மளிகை பொருட்கள் ஒரு மாதத்திற்கு தேவையான பேக்கேஜ் கொடுத்து ஆர் எம் ஆர் சமூக நல அறக்கட்டளை தலைவர் டாக்டர் வாழை பாபு வாழ்த்து தெரிவித்தார்.
-
பொங்கல் பண்டிகை வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வடகிழக்கு பருவமழை நிறைவடைந்துவிட்டதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய பாலச்சந்திரன், வடகிழக்கு பருவமழை நிறைவு பெறவில்லை, பொங்கல் வரை தமிழகத்தில் மழை இருக்கும் என கூறினார். 2024ல் 4 புயல்கள் ஏற்பட்டதாகவும், கடந்த ஆண்டைவிட இம்முறை 143 மி.மீ.…
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், சிவகங்கை மாவட்டம் சிராவயல் உள்ளிட்ட இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. வரும் ஆண்டு பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து முதன்மைச் செயலாளர் சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் கலந்து…
-
2024ம் ஆண்டிற்கான பொங்கல் திருநாளை முன்னிட்டு, மதுரை மாநகர காவல்துறை சார்பில் தல்லாகுளம் காவலர் குடியிருப்பு மற்றும் திடீர்நகர் காவலர் குடியிருப்பு ஆகிய இடங்களில் நடைபெற்ற பொங்கல் விழாவினை, மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன், தொடங்கி வைத்தார். மேலும், காவல் கட்டுப்பாட்டு அறை, விரல்ரேகைப் பிரிவு, சைபர் கிரைம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆகிய இடங்களில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை மாநகர காவல்துறை சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவின்போது, பல்வேறு கலை…
-
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் விழா கொண்டாடினார்கள். ஒன்று சேர்ந்த முன்னாள் மாணவர்கள் ,தமிழர் பாரம்பரிய முறைப்படி ஆண்கள் வேட்டி பெண்கள் பாரம்பரிய சேலை அணிந்தும் தாங்கள் படித்த பள்ளியில் கூடி பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர் . பின்னர், ஒருவருக்கொருவர் தங்களின் பள்ளி பருவத்தில் படித்த மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர், பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள்…
-
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், “திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும், “எல்லோருக்கும் எல்லாம்” எனும் திராவிட மாடல் பொற்கால ஆட்சியில், தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூபாய் 1,000 வழங்கும் திட்டம், கல்லூரிப் பெண்களுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கும் “புதுமைப் பெண் திட்டம்.”, “மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்துப் பயணம்”,…
-
தமிழர் திருநாளாம் தைத்திருநாள் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கோவையில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பாரம்பரியப் பண்பாட்டு விழாவாகப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழர் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் பட்டிமன்றம், கிராமிய நடனங்களோடு பொங்கல் வைத்துக் கொண்டாடிய மாணவிகள் பொங்கல் விழாவின் அங்கமான உறியடித்தலில் ஆர்வத்தோடு பங்கு கொண்டனர். பொங்கல் விழாவின் முக்கியத்துவத்தையும் பொங்கல் வைக்கும் முறையையும் இன்றைய இளம் தலைமுறை அறிந்து கடைபிடித்தது பாராட்டத்தக்கதாக இருந்தது. கல்லூரியெங்கும் வண்ணக்…
-
பொள்ளாச்சி நகராட்சியில் பொங்கல் தின முன்னிட்டு நகராட்சி வளாகத்தில் நகர மன்ற தலைவர் சியாமளா தலைமையில் பொங்கல் வைத்து கொண்டாடினர், நகராட்சி ஆணையாளர் சுப்பையா மற்றும் வார்டு உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை வருகின்ற 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையின் முக்கியமான நிகழ்வாக தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஜல்லிகட்டை ஊக்குவிக்கும் விதமாக கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் யு.எம்.டி ராஜா பூதக்கண்ணாடியை கொண்டு சூரிய ஒளி மூலம் ஜல்லிகட்டு ஓவியத்தை வரைந்துள்ளார். இதில் ஜல்லிக்கட்டு காளையும் மாடு பிடி வீரரும் இடம்பெற்றுள்ளனர்.இதற்காக 7 மணி நேரம் எடுத்து கொண்டுள்ள இவர் தமிழர்களின்…
-
மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக பேரூர் ஆதீன வளாகத்தில் இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சமத்துவ பொங்கல் கொண்டாடி,நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர். இந்நலையில் தொடர்ந்து பதினைந்தாவது ஆண்டாக கோவை பேரூர் ஆதின வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்கள் இணைந்து கொண்டாடிய…