Tag: #police

  • திருமலையில் ரத ஸப்தமி- பாதுகாப்பு பணியில் 1,250 போலீசார்

    திருப்பதி திருமலையில் ரத ஸப்தமி விழாவையொட்டி 1,250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதியில் அன்னமைய்யா பவனில் அற​ங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு தலைமையில் அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், வரும் பிப்ரவரி 4ம் தேதி திருமலையில் மிக சிறப்பாக ரதசப்தமி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு  2.5 முதல் 3 லட்சம் வரை பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.​ சர்வ தரிசன டோக்கன்களும் பிப்ரவரி 3ம் தேதி முதல்…

  • ஸ்வர்கா பவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாம் – கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

    கோவையில் ஸ்வர்கா பவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற காவலர்களுக்கான விரிவான மருத்துவ முகாம் அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. முகாமை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில், ஆயுர்வேதம், உட்சுரப்பியல், பிசியோதெரபி, பெண்கள் மருத்துவம், நுரையீரல் பரிசோதனை, பல் மற்றும் கண் பரிசோதனை என விரிவான மருத்துவ முகமாக நடைபெற்றது. இந்த முகாமை துவக்கி வைத்த பின் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அபோது அவர், காவலர்களின்…

  • காவல்துறை தடகள போட்டி: காவல் ஆணையர் பாராட்டு

    63-வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல தடகள போட்டிகள் கோவை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில், தென்மண்டல காவல்துறை அணி சார்பில் மதுரை மாநகரைச் சேர்ந்த சி.2-சுப்பிரமணியபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் குமரேசன், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தங்கம்,வெள்ளி பதக்கங்களும், மதிச்சியம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் சிதம்பரம், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் வெள்ளி, வெண்கல பதக்கங்களும், மதிச்சியம் போக்குவரத்து தலைமை காவலர் செந்தில்குமார் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்…

  • குடியரசு தினத்தை கோவையில் பலத்த பாதுகாப்பு

    நாட்டின் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகரில் குடியரசு தின விழா நடைபெற உள்ள வ.உ.சி மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்களில் மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து முக்கியமான இடங்களில்   பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • காயம் பட்டவர்களை காப்பாற்றிய போலீஸ் ரோந்து வாகனம்

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, விபத்தில் அடிபட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல், ஹைவே ரோந்து வாகனத்தில் ஏற்றி சென்ற காவலர்களுக்கு பாராட்டுகள் குவியத் தொடங்கின. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மதுரை செல்லும் சாலையில் பாரத் பெட்ரோலியம் பங்க் அருகில் எதிர்பாராத விதமாக விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர்கள் அடிபட்டு படுகாயங்களுடன் ரோட்டில் கிடந்தனர். உடனடியாக, அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னால் அவ்வழியாக சென்ற…

  • காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு நடைபெற்ற வளைகாப்பு

    கோவையில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் இந்து பிரியா. எட்டு மாத கர்ப்பிணியான இந்து பிரியாவுக்கு உடன் பணியாற்றும் காவலர்கள் மற்றும் ஆய்வாளர் சுமதி ஆகியோர் காவல் நிலையத்திலேயே வளைகாப்பினை நடத்தினர். இந்து பிரியாவுக்கு வளையல் அணிவித்து, மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசி, 10 வகையான உணவுகளுடன் காவலர் இந்து பிரியாவுக்கு வளைகாப்பு நடைபெற்றது.…