Tag: #pmk
-
பாமக இளைஞரணி தலைவர் நியமன விவகாரத்தில் தந்தை ராமதாஸ்- மகன் அன்புமணி இடையே பொதுக்குழு மேடையில் மோதல் வெடித்த நிலையில், திடீரென இருவரும் ராசியாகி உள்ளனர். தந்தை பக்கம் செல்வதா, மகன் பக்கம் நிற்பதா என தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த டிசம்பர் 28ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற…
-
தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். ராமதாஸ் – அன்புமணி இடையே நடைபெறும் சந்திப்பில் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு, பாமக எம்.எல்.ஏ. அருள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் , “இந்த சந்திப்பில் என் கோரிக்கையை தலைவர் ஏற்று கொண்டார். அடுத்த கட்டம் என்னென்ன போராட்டங்கள் எந்தெந்த பகுதியில் நடத்தலாம் என்று ஆலோசனை நடத்தினோம். மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும். எங்கள் கட்சி…
-
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை வந்துள்ள பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி அவர்கள், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, கொங்கு மண்டலம் என்றால் தமிழ்நாட்டிற்கு தொழில் வளங்களை கொடுக்கும் மண்டலம். ஆனால் கடந்த சில ஆண்டு காலமாக இந்த பகுதியில் கிட்டத்தட்ட 50,000 க்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் மின் கட்டண உயர்வு. அதிலும் குறிப்பாக கொரோனா கால கட்டத்திற்கு பிறகு பல நிறுவனங்கள் மூடிய…
-
மை வி 3 ஆட்ஸ் என்ற நிறுவனம் கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாகவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தொடர்ந்து பாமக வினர் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி யை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட கண்ணன் என்ற நபர் மை வி 3 ஆட்ஸ் மீது நீங்கள் அளிக்கும் புகார்களை நிறுத்த வேண்டுமென கொலை மிரட்டல்…
-
பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் மற்றும் பாஜக மாநில அண்ணாமலை முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றன அதில்…
-
கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மைவி3 விளம்பர நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல்துறையில் கோவை பாமக சார்பில் கோவை பாமக மாவட்ட செயலாளர் கோவை ராஜ் தலைமையில் புகார் மனு அளிக்கபட்டது. மைவி3 விளம்பர நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஒருங்கினைந்த பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆனையரிடம் மனு அளிக்கபட்டது. அம்மனுவில் மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுவருவதுடன் காவல்துறையினரையும்…
-
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் ஐநா காலநிலை மாநாடு தொடங்கியது. கரிம உமிழ்வை தடுத்தல், தகவமைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை முறையாக மேற்கொண்ட பிறகும் கூட, இயற்கை இடர்களால் நேரும் தவிர்க்க இயலாத இழப்புகளை எதிர்கொள்ளும் வகையில், ‘இழப்பு மற்றும் சேத நிதியம்’ (Loss and Damage Facility) தொடங்கப்பட்டது. இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். இக்கூட்டத்தில், 140 நாடுகளின் பிரதமர்கள் உட்பட சுமார் 80,000 பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். மருத்துவர் ராமதாஸை நிறுவனராகக் கொண்ட பசுமைத் தாயகம்…